Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைகளில் வெறும் 299 குழிகள் மட்டுமே உள்ளது மாநகராட்சி கூறுகிறது

Print PDF

தினகரன் 11.08.2010

சாலைகளில் வெறும் 299 குழிகள் மட்டுமே உள்ளது மாநகராட்சி கூறுகிறது

மும்பை, ஆக.11: மும்பை நகர சாலைகளில் வெறும் 299 குண்டுகுழிகள் மட்டுமே இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள் ளது.

மும்பையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகளில் அதிக அளவு குண்டும் குழியும் ஏற்பட் டுள்ளது. குண்டுகுழிகளை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து மேயர் ஸ்ரத்தா ஜாதவ் அதிகாரிக ளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து கூடுதல் கமிஷனர் குப்தா அளித்த பேட்டியில், "மாநக ராட்சி ஒப்பந்ததாரர் கள் சிலர் சாலைகளை பழுது பார்க்க தரமான பொருட்களை பயன்படுத் தாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை சாலை கள் பழுதடையாமல் இருக்கவேண்டும். அவ்வாறு பழுதடைந்தால் அதனை சம்மந்தப்பட்ட ஒப்பந்த தாரரை கொண்டு சரி செய்யும்படி கேட்டுக்கொள் ளப்படும்.

அல்லது அந்த ஒப் பந்ததாரருக்கு மேற் கொண்டு பணிகள் கொடுக் கப்படாது. சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் இருப்பதற்கு மும்பை துறைமுகம், மாநில சாலை மேம்பாட்டு கழகம், பொதுப் பணித்துறை மற்றும் எம்.எம்.ஆர்.டி..யுடன் மாநகராட்சி இணைந்து செயல்படும்" என்று தெரி வித்தார்.

மும்பையில் மழை காரணமாக சாலைகளில் 5425 குண்டுகுழிகள் ஏற்பட்டதாகவும் இதில் 5116 குண்டுகுழிகள் நிரப்பி சரி செய்யப்பட்டு விட்ட தாகவும் 299 குண்டுகுழிகள் மட்டுமே இன்னும் நிரப்பப் படாமல் இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரேல் பகுதியில் 545 குண்டுகுழிகள் இருந்தது. அதில் பெரும் பாலானவை சரி செய்யப் பட்டு விட்ட நிலையில் தற்போது 8 குண்டுகுழிகள் மட்டுமே இன்னும் நிரப்பப் படாமல் இருக்கிறது.

 

ராமநாதபுரம் நகரில் புதிய சாலை அமைக்க ரூ.5.57 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 10.08.2010

ராமநாதபுரம் நகரில் புதிய சாலை அமைக்க ரூ.5.57 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம், ஆக.10: ராமநாதபுரம் நகரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் பணிகள் விரை வில் துவங்க உள்ளன.

ராமநாதபுரம் நகரில் ரூ.31.57 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இதில் 95சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் பங்களிப்பு தொகை இன்னும் வர வேண்டிய நிலை உள்ளதால், சாலைகளை செப்பனிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்பு தொகை மிகவும் மந்தமாக உள்ளது. இதனால் பணி முடிவடைந்த பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.6 கி.மீ து£ரம் சாலை அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இன்னும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் அதிகம் பேர் உள்ளனர். தாமதமாக பணம் செலுத்தி இணைப்பு பெறுவோருக்கு குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பாக முழு அளவில் பணம் செலுத்திய பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலைகள் அமைக்கப்படும். விரைவாக பணம் செலுத்தி தாமதத்தை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.

 

சாலைகளை புதுப்பிக்க வேண்டும்

Print PDF

தினமணி 02.08.2010

சாலைகளை புதுப்பிக்க வேண்டும்

நாமக்கல், ஆக. 1: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

÷நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் நாமக்கல் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகர நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷நகரச் செயலர் அம்மன் வி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. சம்பத்குமார், மாநில மாணவரணி துணைச் செயலர் என். மகேஸ்வரன், வழக்கறிஞர் எஸ்.கே. வேல், கேப்டன் மன்ற மாவட்டச் செயலர் விஜயன் உள்ளிட்ட பலர் பேசினர்.

÷நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், காய்கறிகள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான பணிகள் முடிந்த பின்னரும் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால், நகரச் சாலைகள் அனைத்துமே குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

÷ இதேபோல், நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளதை தூய்மைப்படுத்தி பயணிகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும். புதிய குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக நகரில் தோண்டப்படும் குழிகளை முழுமையாக மூட வேண்டும்.

 


Page 110 of 167