Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் ஸி60 லட்சத்தில் புதிய குறியீடுகள்

Print PDF

தினகரன் 30.07.2010

தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் ஸி60 லட்சத்தில் புதிய குறியீடுகள்

புதுடெல்லி, ஜூலை 30: தெற்கு டெல்லியில் தரம் உயர்த்தப்பட்ட சாலைகளில் ஸி 60 லட்சம் செலவில் சாலை விதிகள் பற்றி குறியீடுகள் வரையப்படவுள்ளது.

டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் காமன்வெ ல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

இந்நிலையில், தெற்கு டெல்லியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சாலை விதிகளை விளக்கும் பல்வேறு குறியீடுகளை புதிதாக வரைய மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம், மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தெற்கு டெல்லியில் உள்ள தமிழ்ச்சங்கம் சாலை, அரபிந்தோ சாலை, வசந்த் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் புதிய குறியீடுகள் வரையப்படவுள்ளன. இதற்கு, தெர்மாபிளாஸ்டிக் பெயிண்டை பயன்படுத்துவது எனவும் நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பணியை நிறைவேற்றி முடிக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனம் வசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை

ஸி 60.66 லட்சம் செலவில் நிறைவேற்றித் தருவதாக அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

80 அடி சாலை திறப்பு: தமிழக அரசுக்கு நன்றி

Print PDF

தினமணி 30.07.2010

80 அடி சாலை திறப்பு: தமிழக அரசுக்கு நன்றி

ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 80 அடி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடுவது தொடர்பான அரசாணை வெளியிட்டதற்காக, தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

முதல்வர் கருணாநிதிக்கு கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பியுள்ள கடித விவரம்:

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பிரப் சாலை மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் 80 அடி சாலையைத் திறந்துவிட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இச்சாலையை திறந்து விடுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துவக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகனங்களின் எரிபொருள் தேவையும் வெகுவாகக் குறையும்.

தொழில், வணிகமும் மேம்படும். இதற்காக முதல்வர், துணை முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொழில்-வணிகக் கூட்டமைப்பில் உள்ள 95 சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மும்பை சாலைகளில் குண்டு, குழிகள் 10 நாளில் சீர்படுத்தப்படும்

Print PDF

தினகரன் 29.07.2010

மும்பை சாலைகளில் குண்டு, குழிகள் 10 நாளில் சீர்படுத்தப்படும்

மும்பை, ஜூலை 29: குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் இன்னும் 10 நாளில் சீர்ப்படுத்தப்படும் என்று மும்பை பொறுப்பு அமைச்சரிடம் மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.

மும்பையில் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக மாநில அரசுக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து நேற்று மும்பை பொறுப்பு அமைச்சரான ஜெயந்த் பாட்டீல் மாநகராட்சி அதிகாரிகளுடன் பெடர் ரோடில் இருந்து நரிமன் பாயின்ட்டுக்கு செல்லும் பிரதான சாலையை ஆய்வு செய்தார்.

இதன் பிறகு பேட்டி அளித்த ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:

சாலைகளின் நிலை மோசமாக இருப்பதை மாநகராட்சி ஒத்துக் கொண்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் சாலைகளில் உள்ள குண்டு குழிகளை நிரப்பி சீர்ப்படுத்துவதாக என்னிடம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் சாலைகளை ஆய்வு செய்வேன்.

சாலை அமைக்கும் பணி தொடர்பான முறைகளை மாநகராட்சி மாற்ற வேண்டும். அப்போதுதான் மழைக்காலத்தில் மீண்டும் மீண்டும் இந்த பிரச்னை ஏற்படாது.

சாலைகளில் குண்டு குழிகள் ஏற்பட்டு பழுதடைந்தால் கான்ட்ராக்டரை பொறுப்பாளராக்க வேண்டும். அவருக்கு எதிர்காலத்தில் சாலை பணிகள் எதையும் மாநகராட்சி கொடுக்கக்கூடாது.

மலேரியா நோயின் தாக்கம் ஒர்லி, பரேல், குர்லா, பைகுலா, அந்தேரி, ஜோகேஸ்வரி மற்றும் தாதர் ஆகிய இடங்களில அதிகளவில் உள்ளது. மலேரியா நோயாளிகளில் 58 சதவீதம் பேர் இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள்.

சிகிச்சை எடுப்பதை தாமதப்படுத்துவதால் தான் மலேரியாவால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். மலேரியா நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதாக ஜூபிடர் மற்றும் லீலாவதி மருத்துவமனைகளின் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பான உண்மைகளை கண்டறியுமாறு நான் மும்பை மாநகராட்சியை கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 111 of 167