Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.126 கோடி செலவில் சாலை சீரமைப்பு

Print PDF

தினமலர் 28.07.2010

ரூ.126 கோடி செலவில் சாலை சீரமைப்பு

சென்னை : "சென்னையில் 10 மண்டலங்களிலும் 126 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 542.26 கி.மீ., நீளமுள்ள 2,093 உட்புற சாலைகள் 101 கோடியே 87 லட்சம் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட 435 உட்புற சாலைகளில் 4 லட்ச ச.மீ., பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் முறையில் 3 கோடி ரூபாய் செலவில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பஸ் சாலை துறை சார்பில், 153 சாலைகள் 50 கி.மீ., நீளத்திற்கு 4 செ.மீ., ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து சேவர் இயந்திரம் மூலம் சாலை அமைக்கப்படும். இதற்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 126 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சூரிய நாராயண செட்டி சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே., சாலை, போஸ்டல் காலனி ஆகிய சாலைகளில் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. மேலும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, ராஜாஜி சாலை, டிமலஸ் சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, பின்னி சாலை போன்று 29 சாலைகள் 10.78 கி.மீ., நீளத்திற்கு அகழ்ந்தெடுத்து சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

 

மாங்காட்டில் ஸீ1 கோடியில் தார், சிமென்ட் சாலைகள்

Print PDF

தினகரன் 27.07.2010

மாங்காட்டில் ஸீ1 கோடியில் தார், சிமென்ட் சாலைகள்

பூந்தமல்லி, ஜூலை 27: மாங்காடு பகுதியில் ஸீ1 கோடியில் தார், சிமென்ட் சாலைகள் அமைப்பது என்று பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மாங்காடு பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில், சக்ரா நகர், மசூதி தெரு, பட்டு பஜார் தெரு, மேல்மாநகர் குறுக்கு தெரு, சக்தி நகர், தெற்கு காமாட்சி நகர், ரகுநாதபுரம் கண்டோன்மென்ட், சாதிக் நகர் பிரதான சாலை, காமாட்சி நகர் விரிவாக்கம் மற்றும் பட்டு எஸ்.கே.எம்.நகர் போன்ற பகுதிகளில் தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் ரூ.1 கோடி செலவில் அமைப்பது என்றும், மங்களபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய் மற்றும் மாந்தியம்மன் கோயில் தெருவில் பொதுப் பணித்துறை கால்வாய் குறுக்கே கல்வெட்டு விரைவில் கட்டுவது என்றும், இதற்கான பணி ஆணைகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

செம்பாக்கம் - பல்லாவரம் இணைப்பு சாலைக்கு விமோசனம்

Print PDF

தினமலர் 23.07.2010

செம்பாக்கம் - பல்லாவரம் இணைப்பு சாலைக்கு விமோசனம்

தாம்பரம் : செம்பாக்கம் - பல்லாவரம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் 30 வருட போராட்டத்திற்கு பிறகு, வனத்துறையின் அனுமதி பெற்று துவக்கப்பட்ட சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் இச்சாலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.தாம்பரம் - வேளச்சேரி சாலையில் இருந்து செம்பாக்கம் சுரேந்தர் நகர், அஸ்தினாபுரம் வழியாக செம்பாக்கம் - பல்லாவரத்தை இணைக்கும் முக்கிய பிரதான சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தாரகேஸ்வரி நகர், சாம்ராஜ் நகர், வி.ஜி., பொன் நகர், திருமலை நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு மழையின் போதும், இச்சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கிவிடும். இதனால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில், சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுவதால், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். முக்கியமான இச்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.

ஆனால், இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், சாலை அமைக்க வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற, பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. சில காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளாக வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், அமைச்சர் அன்பரசன், தாம்பரம் எம்.எல்.., எஸ்.ஆர்.ராஜா மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் முயற்சியால், 30 வருடங்களுக்கு பிறகு சாலை அமைக்க சமீபத்தில் வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தது.

இதையடுத்து, ஸ்ரீ பெரும்புதூர் எம்.பி., டி.ஆர்.பாலு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய், பேரூராட்சி பொது நிதி 30 லட்சம் ரூபாய் என 60 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. தடைபடாமல் துரிதமாக நடந்து வந்த இச்சாலைப் பணி தற்போது முடிந்துள்ளது. விரைவில் இச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்பது வருட போராட்டத்தின் விளைவாக வனத்துறை இடத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுப்புற பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Page 113 of 167