Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மாநகராட்சி நிர்வகிக்கும் 14 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க திட்டம்

Print PDF

தினமணி 28.06.2010

மாநகராட்சி நிர்வகிக்கும் 14 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க திட்டம்

திருப்பூர், ஜூன் 26: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட 14 சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புக்கு ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துருக்களை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

÷திருப்பூர் மாநகரில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முதல் மாநகராட்சி எல்லைக்கு வரை கிழமேல் திசையிலான கல்லூரிச்சாலை, அவிநாசி சாலையையும் பெருமாநல் லூர் சாலையையும் இணைக்கும் 60 அடி ரோடி, வலையன்காடு மெயின் ரோடு (அ விநாசி சாலை முதல் மாநகராட்சி எல்லை வரை), அங்கேரிபாளையம் சாலை, கண் ணகி நகர் 60 அடி சாலை (பெருநல்லூர் சாலையையும், டிஎன்கே.புரம் சாலையும் இணைக்கும் சாலை), கொங்குநகர் பிரதான சாலை (டிஎன்கே.புரம் பிரதான சாலை);

÷வஉசி.நகர் மெயின் ரோடு, நடராஜா தியேட்டர் சாலை - நேரு வீதி மற்றும் குமரன் சாலை, வெள்ளிவிழா பூங்கா சாலை, மங்கலம் சாலை-முருகம்பாளையம் சாலை, பல்லடம் சாலை - மங்கலம் சாலை, காங்கயம்பாளையம் புதூர் சாலை தாராபுரம் சாலை சந்திப்பு முதல் காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் வரை, தென்னம்பாளை யம் சாலை (சந்தைப்பேட்டை முதல் தாராபுரம் சாலை சந்திப்பு வரை) ஆகிய 14 சாலைகள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

÷நாளுக்குநாள் பெருகி வரும் வாகன எண்ணிக்கை காரணமாக, இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புக்கு ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டு, மாமன்ற அனுமதியுடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் தயார் செய்துள்ள கருத்துருக்களுக்கு ஜூன் 29-ல் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற அனுமதிக்கு வைக்கப்பட உள்ளது. மன்ற அனுமதி கிடைத்தவுடன் அரசுக்கு அனுப்பி மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பிலுள்ள 14 சாலைகளும் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

"தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சீரமைக்க முடியாது : கூடுதல் நிர்வாக இயக்குனர்

Print PDF

தினமலர் 28.06.2010

"தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சீரமைக்க முடியாது : கூடுதல் நிர்வாக இயக்குனர்

வால்பாறை: ""தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க முடியாது,'' என நகராட்சிகளின் கூடுதல் நிர்வாக இயக்குனர் வால்பாறையில் தெரிவித்தார்.வால்பாறை நகராட்சி சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடப்பணி நிறைவடைந்துள்ளது. வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது.நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் துரை சந்திரசேகரன் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: டெண்டர் விடப்பட்ட பணிகள் அனைத்தும் விரைந்து செய்து முடிக்கப்படும். தனியார் எஸ்டேட் ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க போதிய நிதி வசதி இல்லை. எனவே நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வால்பாறையில் உள்ள அனைத்து தனியார் எஸ்டேட் ரோடுகளும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். நகராட்சி சார்பில் தனியார் எஸ்டேட் ரோடுகள் கண்டிப்பாக சீரமைக்க முடியாது என்றார்.ஆய்வின் போது வால்பாறை நகராட்சித்தலைவர் கணேசன், செயல்அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

விழுப்புரம் நகரில் ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 22.06.2010

விழுப்புரம் நகரில் ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

விழுப்புரம், ஜூன் 22: விழுப்புரம் நகரில் ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை போடும் பணியை நகர்மன்றத்தலைவர் ஜனகராஜ் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் நகரில் ரூ.30 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது.

நகராட்சி ஒப்புதலை பெற்று குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் பணிகள் நடக்கிறது. 90 கிமீ., தூரத்திற்கு இப்பணிகள் நடைபெற்று வருகிறது. 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. சேவியர் காலனி, எருமணதாங்கல், கா.குப்பத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது. இந்த பள்ளங்களால் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்று நகர மக்கள் கூறி வந் தனர்.

அவர்களது கோரிக் கையை ஏற்று பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்ததும் நகரம் முழு வதும் சிமெண்ட் சாலைகள் போடப்படும் என்று அமைச்சர் பொன்முடி, நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆகியோர் உறுதி யளித்தனர். 2010ம் ஆண்டு இறுதிக்குள் சிமெண்ட் சாலை போடப்பட்டிருக் கும் என்று நம்பிக்கையுடன் கூறினர்.

இதையடுத்து சிமெண்ட் சாலை போடுவதற்கான நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுப்பட்டனர். ரூ.13 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை போடுவதற்காக திட்டமிடப்பட்டு நிதி யுதவி கேட்டு தமிழக அரசுக்கு நகராட்சி நிர் வாகம் திட்ட அறிக்கையை அனுப்பியது. இந்த பணி கள் குறித்து பரிசீலித்து தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

இதன்பின்னர் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களுக்கு தடையின்மை சான்று கேட்டு குடிநீர் வடிகால் வாரியத்திடம் நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது. அதன்படி பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட 15 வீதிகளின் பட்டியல் வழங்கப்பட் டது.

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக, விழுப்புரம் நாப்பாளையத்தெரு வில் ரூ.4.10 லட்சம் மதிப் பில் 160 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக் கும் பணி தொடங்கியது. இந்த பணிகளை துவக்கி வைத்து நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆய்வு செய்தார்.

 


Page 115 of 167