Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்

Print PDF

தினகரன் 18.06.2010

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்

சென்னை, ஜூன் 18: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.120 கோடியில் சீரமைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பெரியமேட்டில் உள்ள ராஜா முத்தையா சாலையை பெயர்த்தெடுத்து புதிதாக தார் சாலை போடும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று துவங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பழைய தார் சாலைகள் மேல் புதிய சாலை போடுவதால் சாலையின் மேல் மட்டம் உயருகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதை தவிர்க்க புதிய இயந்திரம் மூலம் பழுதடைந்த சாலையை பெயர்த்தெடுத்து மீண்டும் அதே இடத்தில் மேடு பள்ளம் இல்லாமல் தார் சாலை போடப்படுகிறது. இந்த புதிய இயந்திரம் 280 எச்.பி. திறன் கொண்டது. இது ஒரு நிமிடத்துக்கு 32 மீட்டர் நீளம், 1.3 மீட்டர் அகலம் உள்ள தார் சாலையை வெட்டி அப்புறப்படுத்துகிறது.

இயந்திரத்தின் நடுவில் அரைக்கும் டிரம் பொருத்தப்பட்டுள்ளது. அரைத்து எடுக்கப்படும் துகள்கள் டிப்பர் லாரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அப்புறப்படுத்தப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் இந்த நிதி ஆண்டில் 2093 உட்புற சாலைகள் 542.26 கி.மீ. நீளத்துக்கும், 125 பேருந்து சாலைகள் 37.24 கி.மீ. நீளத்துக்கும் ரூ.120 கோடியில் புதிய தார் சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சாலைகள் பெயர்த்தெடுத்து புதிய தார் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் எஸ்.சுரேஷ்குமார், மண்டல குழு தலைவர் எஸ்.சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்

Last Updated on Friday, 18 June 2010 11:47
 

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: மேயர் பேச்சு

Print PDF

தினமலர் 18.06.2010

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: மேயர் பேச்சு

சென்னை:""நகரில் உள்ள உட்புற சாலைகள் 120 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப் படும்,'' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.தார் சாலை உயர்வதை தடுக்கும் வகையில், அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கும் பணியை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் மேயர் சுப்ரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:நகரில் தொடர்ந்து சாலைகள் போடுவதால் சாலைகள் உயர்வதை தடுக்கும் வகையில், புதிய நடை முறையில் சாலையை அகழ்ந்தெடுத்து "கோல்டு மில்லிங்' என்ற இயந்திரம் மூலம் தார் சாலை அமைக்கப்படும்.

ஏற்கனவே "கோல்டு மில்லிங்' இயந்திரம் மூலம் சாலையை அகழ்ந்தெடுத்த போது, சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது.புதிய "கோல்டு மில்லிங்' இயந்திரம் மூலம், ஒரே நேரத்தில் 1.30 மீட்டர் அகலத்திற்கு சமமாக சாலையை அகழ்ந்தெடுத்து தார் சாலை போட முடியும். இந்த இயந்திரம் மூலம், ஒரு நாளைக்கு 2,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு சாலை அகழ்ந்தெடுத்து தார் சாலை போட முடியும்.

நகரில் உள்ள 543 கி.மீ., நீளமுள்ள 2,093 உட்புற சாலைகள் 101 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இதில் 435 உட்புற சாலைகள் நான்கு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து தார் சாலை அமைக்கப்படும். 125 பேருந்து சாலைகள் 37.24 கிலோ மீட்டர் நீளத்திற்கு 17 கோடியே 45 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, பணிகள் நிலைக்குழு தலைவர் சுரேஷ் குமார், கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

ஹைபாரஸ்ட் ரோட்டுக்கு தற்காலிகத் தீர்வு

Print PDF

தினமணி 17.06.2010

ஹைபாரஸ்ட் ரோட்டுக்கு தற்காலிகத் தீர்வு

வால்பாறை, ஜூன் 16: வால்பாறை, ஹைபாரஸ்ட் ரோடு பிரச்னையில் தற்காலிகத் தீர்வுக்கு நகராட்சி முன்வந்துள்ளது.

வால்பாறையை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் செவ்வாய்கிழமை முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி கோட்டாச்சியர் அழகிரிசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தற்காலிகமாக நகராட்சி சார்பில் கற்களை போட்டு சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. நகராட்சித் தலைவர் கணேசன் இதில் கலந்து கொண்டார்.

 

Last Updated on Thursday, 17 June 2010 07:16
 


Page 117 of 167