Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை

Print PDF

தினமணி 17.06.2010

கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை

கரூர், ஜூன் 16: கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கரூர் நகராட்சி 10-வது வார்டுக்குள்பட்ட கோபாலபுரத்திலுள்ள சந்துப் பகுதியிலுள்ள மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.10 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

அதிமுக மாவட்டப் பொருளாளர் பி.கே.எஸ். முரளி, ஜெ. பேரவைச் செயலர் எஸ். காமராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், அவைத் தலைவர் அங்குசிவலிங்கம், கவுன்சிலர்கள் எஸ். கமலா, எஸ். வளர்மதி, இனாம்கரூர் நகர ஜெ. பேரவைச் செயலர் வி. செல்வராஜ், நகர சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எம். முகமதுசாதிக், பேச்சாளர் கே. மூர்த்தி, நிர்வாகி பி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கோபி கோட்டத்தில் புதிய சாலைகள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 15.06.2010

கோபி கோட்டத்தில் புதிய சாலைகள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

கோபி, ஜூன் 15: கோபி கோட்டத்தில் ரூ.2.5 கோடி செலவில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோபி நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் அடிக்கடி சாலைகள் பழுதடைந்து வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது வெட்மிக்ஸ் என்ற முறையில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோபியில் இருந்து அத்தாணி வரையுள்ள 12 கி.மீ. தார்சாலை, கோபியில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே பல கோடி ரூபாய் செலவில் வெட்மிக்ஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோபி சத்தி சாலையில் கோவை பிரிவில் இருந்து அளுக்குளி வரை சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்க 1 கோடி ரூபாயும், குருமந்தூர்மேட்டில் இருந்து மாக்கினாம்கோம்பை வரை உள்ள 2 கி.மீ. பழுதடைந்த சாலையை 1 கோடி ரூபாயும், நம்பியூரில் இருந்து புளியம்பட்டிக்கு புதிய தார்சாலை அமைக்க ரூ.50 லட்சமும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அகற்றிக்கொள்ள தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரம் ஜமாபந்தி நடைபெற்றதை தொடர்ந்து அவர்களுக்கு ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த காலஅவகாசம் முடிவுற்ற நிலையில் வருவாய்த்துறை மூலம் உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஓரிரு நாளில் துவங்கும் எனவும், அதைத் தொடர்ந்து சாலைஅமைக்கும் பணி நடைபெறும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தார் சாலை அமைக்கும் பணி: நாஜிம் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 15.06.2010

தார் சாலை அமைக்கும் பணி: நாஜிம் துவக்கி வைத்தார்

காரைக்கால் : காரைக்கால் வடக்கு தொகுதியில் 37 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார்.காரைக்கால் நகராட்சி சார்பில் எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து நித்தீஸ்வரம் தெருவில் 8.82 லட்சம் ரூபாய் செலவில் அங்காடி கட்டு தல், ராஜாஜி நகரில் 10.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைத்தல், தலத்தெரு பெரிய குளம், சிவன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 9.60 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை, பிள்ளைத் தெரு சிவன்கோவில் தெரு வில் 8.18 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவி பிரபாவதி, ஆணையர் ஜோஸ்பேட்டன், நகராட்சி செயற்பொறி யாளர் ராஜராமன், உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், இளநிலைப் பொறியா ளர் ரமேஷ், நகரமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 118 of 167