Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

புதுநயினார்புரத்தில் சிமெண்ட் ரோடு திறப்பு விழா

Print PDF

தினமலர் 08.06.2010

புதுநயினார்புரத்தில் சிமெண்ட் ரோடு திறப்பு விழா

சாயர்புரம் : சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட புதுநயினார்புரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் ரோடு திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சாயர்புரம் டவுன் பஞ்.,தலைவர் பொன்சேகர் தலைமை வகித்தார். புதுநயினார்புரம் ஊர்த் தலைவர் முருகானந்தராஜ் முன்னிலை வகித்தார். ராகவன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்..,சுடலையாண்டி கலந்து கொண்டு புதிய சிமெண்ட் ரோட்டை திறந்து வைத்துப் பேசினார். விழாவில் முன்னாள் ஒன்றிய திமுக.,கவுன்சிலர் சுந்தரபாண்டியன், டவுன் பஞ்.,கவுன்சிலர் தங்கரதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபாண்டியன் மற்றும் ஆனந்தராஜ், விஜி, ராமசாமி, செந்தூர்பாண்டி, சித்திரைவேல், பட்டுராஜன், குணசேகர், ஜெயக்குமார், சுயஉதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரோடு விரிவாக்கத்திற்காக 7 கட்டிடங்கள் நேற்று இடிக்கப்பட்டது.

Print PDF

தினகரன் 07.06.2010

ரோடு விரிவாக்கத்திற்காக 7 கட்டிடங்கள் நேற்று இடிக்கப்பட்டது.

கோவை மசக்காளிபாளையம் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதில் 100 மீட்டர் தூரத்திற்கு 7 வணிக கட்டடங்கள் இருந்தது. 30 அடி அகலத்திற்கு ரோட்டை விரிவாக்க செய்ய இந்த கட்டடங்கள் இடையூறாக இருந்தது.

இந்த கட்டிடங்கள் பட்டா பெற்று, முறையாக அமைக்கப்பட்டிருந்தது. கட்டிடங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கட்டிட உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப நிலத்தை ஒப்படைக்க கட்டிட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். நீண்ட நாட்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர், சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று ரோட்டோரத்தில் இருந்த 7 கட்டிடங்களையும் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இப்பகுதியில் ரோடு போடும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

தென்காசியில் ரூ.6.5 லட்சத்தில் சாலை பணி

Print PDF

தினகரன் 03.06.2010

தென்காசியில் ரூ.6.5 லட்சத்தில் சாலை பணி

தென்காசி, ஜூன் 3: தென்காசி நகராட்சி பழைய மருத்துவமனை அருகே ரூ.6.5 லட்சம் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தென்காசி நகராட்சி 23 மற்றும் 24வது வார்டுக்கு உட்பட்ட படிக்கட்டு பள்ளிவாசல் தெரு முதல் பழைய மருத்துவமனை அருகில் தென்காசி&நெல்லை மெயின்ரோடு வரையிலான சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. தற்போது நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.6.5 லட்சம் செலவில் 250 மீட்டர் நீளத்திற்கு சாலை புதிதாக அமைக்கப்படவுள்ளது. இதற்காக பழுதடைந்த சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பணிகளை நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், நகர் மன்ற துணை தலைவர் இப்ராகிம், ஆணை யாளர் செழியன் ஆகியோர் பார்வையிட்டு துரிதமாக முடிக்க அறிவுறுத்தினர்.

 


Page 121 of 167