Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை அமைக்கும் பணி அரசுக்கு கவுன்சிலர் நன்றி

Print PDF

தினகரன்        25.05.2010

சாலை அமைக்கும் பணி அரசுக்கு கவுன்சிலர் நன்றி

புதுச்சேரி, மே 25: புதுச்சேரி நகராட்சி திருவள்ளுவர் நகர் கவுன்சிலர் ராஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் வார்டில் எனது முயற்சியால் ரூ.30 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு முன்பாக சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுப்பணி குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சண்முகவேலு உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சிறப்புகூறு நிதி மற்றும் நாரா.கலைநாதன் எம்எல்ஏ தொகுதி மேம் பாட்டு நிதி மூலம் திருவள்ளுவர் நகர் முழுவதும் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி நடந்து வருகிறது. நகர் முழுவதும் சோடியம் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புகூறு நிதி ஒதுக்கீடு செய்த அமைச்சர் கள் கந்தசாமி, நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் சிவா, நாரா.கலைநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

Print PDF

தினகரன்     24.05.2010

நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், மே 24: திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி முன்னிலை வகித் தார்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் சந்தானம், மாவட்ட வரு வாய் அதிகாரி முரளிதரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரேணுகா தேவி, மேயர் செல்வராஜ், தாராபுரம் எம்.எல்.. பிரபா வதி, காங்கயம் எம்.எல்.. விடியல் சேகர், திருப் பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, 15.வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் பாலாஜி (பொது), அரிராஜ் (திட்டங்கள்), கோபால் (வடிவமைப்பு), சண்முகநாதன் (கிராம சாலைகள்) ஆகி யோர் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் எந்தெந்த பணிகள் முடிந்து விட்டது. எந்த பணிகள் முடிவடையாமல் தாமதமாக நடக்கிறது. தாமதத்துக்கான காரணம் என்ன? பணிகள் நடைபெறும் போது என்னென்ன இடர்பாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்கப்படுகிறது. சாலை அமைக்கும் போது மற்ற துறையினரான மின்வாரியம், குடிநீர் வடிகால் துறை, தொலைபேசித்துறையால் ஏற்படும் சுணக்கம் குறித்தும் அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யப்படுகிறது.

மாநகர, நகர பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளு டன், ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள உள் ளாட்சி சாலைகளை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் 4 ரயில்வே மேம்பாலங்களும், ஒரு ரெயில்வே கீழ்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார். அமைச்சர் தலைமையில் நடந்தது.

 

கல்லக்குடி பேரூராட்சி சாலை பணி: டால்மியா சிமென்ட் ஆலை நிதி உதவி

Print PDF

தினமலர்     15.05.2010

கல்லக்குடி பேரூராட்சி சாலை பணி: டால்மியா சிமென்ட் ஆலை நிதி உதவி

டால்மியாபுரம்: புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி பேரூராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருச்சி-சிதம்பரம் சாலையில் இருந்து கல்லக்குடி பஸ் நிலையம் வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை ரூ.57.60 லட்சம் செலவில் தார்ச்சாலை, சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா டால்மியாபுரத்தில் நடந்தது.

இத்திட்டத்திற்கு டால்மியா சிமென்ட் நிறுவனம் ரூ.19.20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளது. இவ்விழாவிற்கு டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்குனர் குங்குனே தலைமை வகித்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். கல்லக்குடி பேரூராட்சித் தலைவர் குழந்தைதெரஸ், துணைத் தலைவர் செல்வகுமார், முன்னாள் தலைவர் ஆரோக்கியசாமி, செயல் அலுவலர் ராஜேந்திரன், டால்மியா சிமென்ட் ஆலை பொது மேலாளர் நயினாராஜ், ரமேஷ் பாபு, தொழிற் சங்க பொதுச் செயலாளர் அருணாசலம், ஒப்பந்தக்காரர் முருகவேல், கவுன்சிலர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 


Page 124 of 167