Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சுரண்டை& பாவூர்சத்திரம் சாலையை செப்பனிட ரூ.2 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்        18.05.2010

சுரண்டை& பாவூர்சத்திரம் சாலையை செப்பனிட ரூ.2 கோடி ஒதுக்கீடு

சுரண்டை, மே 18: சுரண்டை பேரூராட்சியில் 8 ஆயிரம் பேருக்கு இலவச கலர் டிவி யை கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.. வழங்கினார்.

சுரண்டை பேரூராட்சிக் குட்பட்ட பங்களா சுரண் டை விலக்கில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியி லிருந்து ரூ.3 லட்சத்தில் புதிய பஸ் நிறுத் தம் கட்டப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவி கோமதி பழனி நாடார் தலைமை வகித்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனி நாடார், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அறங் காவலர்குழு தலைவர் எஸ்.வி.கணேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பா ளர் அப்துல் காதர், சுரண் டை நகரச் செயலாளர் முத்துக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய செய லாளர் வக்கீல் சிவ.பத்ம நாதன், ஆகியோர் முன்னி லை வகித்தனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி சாமு வேல் துரைராஜ் வரவேற் றார்.

கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ புதிய பஸ் நிறுத்தத் தை திறந்து வைத்தார். மேலும் பிளஸ்&2வில் 1121 மார்க் எடுத்து சாதனை படைத்த சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவி கனி மொழிக்கு நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து சுரண்டை ஊர்க்காவலன் பெருமாள் கோயில் வளாகம் மற்றும் கேடிகே வளாகம் ஆகிய இரு இடங்களில் தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சி பேரூ ராட்சி தலைவி கோமதி பழனிநாடார் தலைமையில் நடந்தது. 8496 பேருக்கு கலர் டிவிக்களை கருப்ப சாமி பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார்.

அவர் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி 8496 பேருக்கு ரூ.இரண்டரை கோடியில் வழங்கிய டிவிக் கள் சுரண்டையில் சீதன மாக வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் தலைவர் எப் படி நிர்வாகம் நடத்துவாரோ அதுபோல் கலைஞர் நம்மை காத்து வருகிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் திருமண உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கருணாநிதி ஆட் சிக்கு வந்ததும் அந்த தொகை உயர்த்தப்பட்டு ரூ.25 ஆயிரமாக வழங்கப் படுகிறது.

சுரண்டையில் கலைக் கல்லூரி அமைக்க இந்து நாடார் சமுதாயத் துக்கு பாத்தியப்பட்ட 26 ஏக்கர் நிலத்தை நன்கொடை யாக வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து அரசு மூன்ற¬ரை கோடி ரூபாய் ஒதுக்கி தற்போது கல்லூரி கட்டும் பணி நடந்து வரு கிறது. சுரண்டை& பாவூர் சத்திரம் சாலையை விரிவு படுத்தவும், செப்பனிடவும் அரசு ரூ.2 கோடியே 10 லட்சம் ஒதுக் கியுள்ளது.

இதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி தொடங்க உள்ளது. இது போல் பல வளர்ச்சி திட்டங் கள் சுரண் டை பகுதியில் நடந்து வரு கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வீகே புதூர் தாசில்தார் மணிபாபு, கீழப் பாவூர் ஒன்றிய சேர்மன் எஸ்கேடிபி காமராஜ், மாநில காங்.பொதுக்குழு உறுப் பினர் கலைவேந்தன் சாமி நாதன், நகர துணைத் தலை வர் பால் என்ற சண்முகவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஜெய ராஜ், முப்பிடாதி பாண்டி யன், ஊராட்சிமன்ற தலை வர்கள் குலசேகரப் பட்டி மணிவண்ணன், இடையர் தவணை ராமசாமி, கல்லூரணி அருணோதயம், நகரச்செயலாளர்கள் சம்பவர்வடகரை மாறன், சுந்தரபாண்டியபுரம் செல்வராஜ், ஒன்றிய பிரதிநிதிகள் டென்னிசன், ஜீவன் சத்ய ராஜ், ஜெயபால், பாலன், அரவிந்த், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், அறங் காவலர் வைத்தீஸ்வரி, தென்காசி நகராட்சி தலை வர் கோமதிநாயகம், செங்கோட் டை ஒன்றிய இளைஞரணி அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தகவல்

 

உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் புதிய சாலைகள் திறப்பு விழா

Print PDF

தினகரன்     18.05.2010

உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் புதிய சாலைகள் திறப்பு விழா

மார்த்தாண்டம், மே 18: உண்ணாமலைக்கடை பேரூ ராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சாலைகளை பாஜ மாவட்டத் தலைவர் தர்மராஜ் திறந்து வைத் தார்.

உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியில் ரூ. 20 லட்சம் செலவில் கோட்டகம் பிருந்தாவன் சாலை, ரூ. 17 லட்சம் செலவில் மாமூட்டுக் கடை, கட்டத்திவிளை வழியாக விரிகோடு சாலை அமைக்கும் பணி கள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நடந்தன. இந்த இரு புதிய சாலைகளுக் கான திறப்பு விழா கோட்டகத்தில் நடந்தது.

உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித் தார். கவுன்சிலர்கள் நிர் மலா, லூகாஸ், ஜெயக்குமார், சசி குமார், முன் னாள் கவுன்சிலர் நாக ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பாஜ மாவட்டத் தலைவர் தர்ம ராஜ் திறந்து வைத்து பேசி னார்.

பாஜ மாவட்ட அமை ப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்சந்திரகுமார், மாவட்டச் செயலாளர் விஜயபிரசாத், ஒன்றிய இணை அமைப்பாளர் விஜயகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், வியாசர் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண் டனர்

 

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி        18.05.2010

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

பழனி, மே 17:பழனியில் ரூ. 33 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. பழனியின் நான்கு ரத வீதிகளில் உள்ள சாலைகளுக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இந் நிலையில், முதல் கட்டமாக பழனி 16-வது வார்டில் உள்ள கிழக்கு ரத வீதியில் ரூ. 33 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். 16-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இந்திரா திருநாவுக்கரசு வரவேற்றார். நகரச் செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார்.

நகராட்சி ஆணையர் மூர்த்தி, தி.மு.. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி சக்திவேல், வழக்கறிஞர் பழனிச்சாமி, காணியாளர் நரேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பூமி பூஜை நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் மினி மோட்டார் சின்டெக்ஸ் திறப்பு விழா மற்றும் முதியோர் தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 


Page 125 of 167