Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 16.04.2010

உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை, ஏப். 15: மதுரை மாநகராட்சியில் உலகத் தரம் வாய்ந்த சாலைப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதை முதலில் நான்கு வார்டுகளில் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவை நிறுவன ஆலோசகர் எம்.எஸ். சீனிவாசன் பேசியதாவது:

தமிழகத்தில் 11 ஊர்களில் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலைப் பணிக்கு அரசு ஒதுக்கியுள்ள ரூ.1000 கோடி நிதியில், 750 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் தரப்படுத்தப்பட உள்ளன.

இதில் பல்வேறு பணிகளான நடைபாதை, விளக்குகள், வர்ணம் தீட்டுதல், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சியில் முதலில் 63, 64, 65 மற்றும் 42-வது வார்டுகள், இப்பணிக்கு முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, மற்ற வார்டுகளிலும் திட்டம் நிறைவேற்றப்படும்.

இப்பணிக்கு 5 ஆண்டு காலத்துக்கு சாலைகள் தோண்ட முடியாத அளவுக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை போன்ற பல்வேறு பணிகள் முடிந்த சாலைகள் தேர்வு செய்யப்படும். இக்குறிப்பிட்ட சாலைகள் 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்து பராமரிக்கப்படும்.

இதில், வாகன நிறுத்தும் இடம், சர்வீஸ் சாலை, மருத்துவமனை, கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இணைப்புச் சாலை மற்றும் நவீன சாலைகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தில் அதிக மரங்கள் வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், அனைத்து மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 16 April 2010 09:42
 

தார் சாலை பணிக்கு பூமி பூஜை

Print PDF

தினமலர் 15.04.2010

தார் சாலை பணிக்கு பூமி பூஜை

அவிநாசி : தார் சாலை அமைக்கும் பணிக்கு, அவிநாசியில் பூமி பூஜை நடந்குதது. அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு சீனிவாசபுரத்தில், ரேஷன் கடை முதல் விநாயகர் கோவில் வரை தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.பேரூராட்சி தலைவி புஷ்பலதா தலைமை வகித்தார். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் சிவக்குமார், நகர தி.மு.., முன்னாள் செயலாளர் மனோகரன், ஒப்பந்ததாரர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.பேரூராட்சி தலைவி புஷ்பலதா கூறுகையில், ''ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 0.7 கி.மீட்டருக்கு தார் ரோடு அமைக்கப்படுகிறது. இன்னும் இரு வாரத்துக்குள் பணி நிறைவடையும்,'' என்றார்.

Last Updated on Thursday, 15 April 2010 08:44
 

சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 07.04.2010.

சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி, ஏப். 6: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் 2009-2010-ம் ஆண்டிற்கு சாலைத் தடுப்பு வேலிகள், வழிகாட்டிப் பலகைகள், ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு மதிப்பீடுகள் பெறப்பட்டு போக்குவரத்து ஆணையருக்கு கருத்துருக்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இந்த நிதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சாலைப் பாதுகாப்பு பணிகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

46 சாலை தடுப்பு வேலிகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டி விளக்குகள் உள்பட பல்வேறு சாலை பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 9,19,550 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர பகுதிகளில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 2,64,500 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் 30.6.2010-க்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 07 April 2010 09:49
 


Page 132 of 167