Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

வரும் நிதியாண்டில் சாலைப் பணிகளுக்கு ரூ.70 கோடி தேவை: ஆட்சியர்

Print PDF

தினமணி 17.03.2010

வரும் நிதியாண்டில் சாலைப் பணிகளுக்கு ரூ.70 கோடி தேவை: ஆட்சியர்

நாகர்கோவில், மார்ச் 16:கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாலை ப் பணிகளுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்தால் பல்வேறு திட்டப் பணிகளையும் நிறைவேற்றலாம் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.

மாவட்டத்தில் இரு மழைக் காலம் இருப்பதால் சாலைகள் அமைப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கீழமணக்குடியில் நடைபெற்ற கீழமணக்குடி- மேலமணக்குடி இணைப்பு பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:

இப் பகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறுகிறது. இந்த பாலத்தை அமைக்க வருவாய்த் துறை மூலம் 1.39 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இம் மாவட்டத்தில் 2009-2010-ம் ஆண்டுக்கு சாலை மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரூ.22 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் பலவும் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால் சாலைப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கிராம அளவில் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி பெரிய தொகையை கடனுதவியாகப் பெற்று தொழில் தொடங்குவது பெரிய விஷயம்.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக இம் மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

Last Updated on Wednesday, 17 March 2010 10:12
 

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 12.03.2010

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூர்: பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக் டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:பாதாள சாக்கடை திட் டப்பணியில் பழுதடைந் துள்ள போடிச்செட்டித் தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, தேரடி தெரு, வெள் ளக்கரை-குமளங்குளம் சாலை, கடலூர்-சித்தூர் சாலைகள் 1கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் (இன்று) நேற்று முதல் துவக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் வரும் மே 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.., நடராஜன், கமிஷனர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 06:58
 

கூடலூரில் ரூ.9 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை: எம்.எல்.ஏ. ஆய்வு

Print PDF

தினமணி 11.03.2010

கூடலூரில் ரூ.9 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை: எம்.எல்.. ஆய்வு

கம்பம், மார்ச் 10: தேனி மாவட்டம் கூடலூர் விவசாய பகுதியில் ரூ.9 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கூடலூரில் மந்தை வாய்க்கால் முதல் பெருமாள் கோயில் வரையிலுள்ள விவசாய நிலங்களுக்குச் செல்லும் சாலையில் புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், கூடலூர் நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் ஆகியோர் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது திமுக நகரச் செயலர் லோகன்துரை, நகராட்சிப் பொறியாளர் ஜீவசுப்பிரமணி, பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 11 March 2010 09:27
 


Page 135 of 167