Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தார் சாலைகள் அமைக்கும் பணியை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினமணி 09.03.2010

தார் சாலைகள் அமைக்கும் பணியை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்

களக்காடு, மார்ச் 8: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்ட பின்னரும், பணியைத் தாமதப்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

களக்காடு பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.சி. ராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் சிவபுரம், கீழப்பத்தை, மேலப்பத்தையிலிருந்து அம்பேத்கர் நகர் செல்லும் சாலை ஆகிய 3 தார் சாலைகளையும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 56 லட்சத்தில் சீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்து டெண்டரும் விடப்பட்டது.

டெண்டர் விடப்பட்டு நீண்ட நாள்களாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.

மேலும், களக்காடு புதிய பஸ் நிலையம் செல்லும் குடிதாங்கிகுளம் சாலை கற்கள் குவிக்கப்பட்டு 1 மாதம் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

சாலை முழுவதும் கற்கள் குவிந்துள்ளதால் அடிக்கடி விபத்துகளும், வாகனங்களில் பழுதும் ஏற்படுகிறது என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, ஒரு வாரத்தில் பணிகளைத் தொடங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன்.

இக்கூட்டத்தில், பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Last Updated on Tuesday, 09 March 2010 10:02
 

ஓவேலி சாலையில் ரூ.40 லட்சத்தில் பணி

Print PDF

தினமலர் 09.03.2010

ஓவேலி சாலையில் ரூ.40 லட்சத்தில் பணி

கூடலூர் : நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்த கூடலூர் - ஓவேலி சாலை 40 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது.கூடலூர் ஓவேலி பேரூராட்சியின் பெரும்பாலான பகுதி பிரிவு 17ன் கீழ் வருவதால், உச்சநீதிமன்ற உத்தரவு படி அப்பகுதியில் அரசு துறை மற்றும் தனியாரின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதில், கூடலூர் - ஒவேலி சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாததால், இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சாலையில் பழுதடைந்துள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே பிரியும் பகுதியிலிருந்து ஆரூட்டுபாறை வரையில் 10.6 கி.மீ., தூரத்தை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 20 லட்சம் ரூபாய், சூண்டியிலிருந்து காந்திநகர் மற்றும் பெரிசோலை வரையில் 19 கி.மீ., தூர பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் என இரு பிரிவாக பிரித்து டெண்டர் விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 09 March 2010 06:32
 

கல்லிடைக்குறிச்சியில் ரூ. 51.20 லட்சத்தில் தார்சாலை

Print PDF

தினமணி 06.03.2010

கல்லிடைக்குறிச்சியில் ரூ. 51.20 லட்சத்தில் தார்சாலை

அம்பாசமுத்திரம், மார்ச் 5: கல்லிடைக்குறிச்சியில் வியாழக்கிழமை ரூ. 51.20 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

தேசிய வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் அகஸ்தியர் கோயில் தெருவில் இருந்து வேம்படியம்மன் கோயில் தெரு, சந்தனமாரியம்மன் கோயில் முன்பிருந்து கோட்டைத் தெரு வரை 6- ம் சாலை, தீச்சன்பச்சேரியில் இருந்து வடக்கு புதுத் தெரு வரை ரூ. 51.20 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப் பணியை வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. வேல்துரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் க. இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகஅதிகாரி அ. அப்துல்ஜப்பார், துணைத் தலைவர் வே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொறியாளர் எஸ். சண்முகசுந்தரம், தொழில்நுட்ப உதவியாளர் ஆர். ஜனர்தனபிரபு, பேரூராட்சி உறுப்பினர்கள் இசக்கியம்மாள், க. பிச்சையா, எஸ். தங்கப்பன், மு. சுப்பிரமணியன், த. ராமகிருஷ்ணன், அ. அலிபாத்து, கோ. தங்கவேல், பொன்மணி, மஹ்மதாள்பேகம், பிரேமா, அகஸ்தியர் கோயில் அறங்காவல்குழு தலைவர் சங்கரநாராயணன், ஸீனத்சாகுல்ஹமீது, கே. கைக்கொண்டான், எம். தெய்வநாயகம், மு. இசக்கி பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 06:25
 


Page 136 of 167