Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகள் சீரமைப்பதற்காக ரூ. 87 லட்சம் நிதி

Print PDF

தினமலர் 05.03.2010

பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகள் சீரமைப்பதற்காக ரூ. 87 லட்சம் நிதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க 21 லட்சமும், குண்டும் குழியுமான ரோடுகளை சீரமைக்க 66.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இரண்டு பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் சுரங்க நடைபாதை திட்ட பணிகள் நடப்பதாலும், கோட் டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு, நகராட்சி அலுவலக ரோடு, உடுமலை ரோடு, கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. நகராட்சி அலுவலகம் ரோடும், ராஜாமில் ரோடும் மிகவும் உருக்குலைந்து காட்டுப்பாதை போன்று மாறி விட்டதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே, நகராட்சி அலுவலக ரோட்டை புதுப்பிக்க 11.20 லட்சமும், ராஜாமில் ரோட்டை புதுப்பிக்க 9.90 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரோடுகளை புதுப்பிக்க 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல, ரோடுகளில் பேட்ஜ் ஒர்க் செய்து ஸ்பீடு பிரேக் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் குடிநீர் திட்ட பணிகளுக்காக மார்க்கெட் ரோடு, கடை வீதி, மகாலிங்கபுரம், வெங்கடேசா காலனி உள்ளி பகுதிகளில் ரோடுகள் தோண்டப் பட்டது. நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் ரோடுகள் உருக்குலைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பழுதடைந்த 30 ரோடுகளில் பேஜ்ட் ஒர்க் மற்றும் ஸ்பீடு பிரேக் மைக்க மொத்தம் 66.15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ரோடுகளை புதுப்பிக்கவும், பேட்ஜ் ஒர்க் செய்யவும் மொத்தம் 87.15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரோடு போடும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றனர்.

Last Updated on Friday, 05 March 2010 07:20
 

வாலாஜாவில் ரூ. 22.5 லட்சத்தில் நமக்குநாமே திட்டத்தில் நடைபாதை

Print PDF

தினமலர் 03.03.2010

வாலாஜாவில் ரூ. 22.5 லட்சத்தில் நமக்குநாமே திட்டத்தில் நடைபாதை

வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. வாலாஜாபேட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை, நகராட்சி, காவல்துறை ஒருங்கிணைந்து முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக காவல் துறையின் சார்பில் அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் அடங்கிய நகர நலக்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் முடிவின்படி காசிவிஸ்வநாதர் கோயில் முதல் பவர்னர் தெரு வரையில் எம்.பி.டி. சாலையின் இருபுறமும் பேரிகாட் அமைத்து, நடைபாதை அமைக்கவும், பொதுமக்களின் பங்களிப்பு ரூ.7.50 லட்சத்துடன் அரசு பங்களிப்பு தொகை ரூ.15 லட்சம் சேர்த்து ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதன் பேரில் அரசு ரூ.22.50 லட்சம் தொகையை ஒதுக்கீடு செய்து பணி செய்வதற்கான நிர்வாக அனுமதியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி சேர்மன் நித்தியானந்தம் கூறுகையில் நடைபாதை அமைக்கும் பணி இந்த வாரத்தில் தொடங்கப்படும். பணி முடிந்தவுடன் வாலாஜா மற்ற நகரங்களை காட்டிலும் ஒரு மாதிரி நகரமாக வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டும் வகையில் இருக்கும், அதற்காக எம்.எல்.., காந்தி, கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் நகர நலக்குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Last Updated on Wednesday, 03 March 2010 07:01
 

ஆரணியில் ரூ.1.65 கோடியில் சிமென்ட் சாலைகள்

Print PDF

தினமணி 26.02.2010

ஆரணியில் ரூ.1.65 கோடியில் சிமென்ட் சாலைகள்

ஆரணி, பிப். 25: ஆரணி நகரில் ரூ.1.65 கோடி மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமை வகித்தார்.

எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து மார்க்கெட் சாலை, சூரியகுளம் பகுதி, அம்பேத்கர் சிலை வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.20 கோடி மதிப்பில் சிமென்ட் சாலையும், காந்தி சிலை முதல் காஜிவாடை வரை சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வியாபாரிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் கருத்துகள் கேட்கப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளர் திருநாவுக்கரசு, தொலைபேசி இளநிலை பொறியாளர் சதாசிவம், நகர்மன்றத் தலைவர் சாந்திலோகநாதன், ஆணையர் சசிகலா, துணைத் தலைவர் லட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் முருகன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:38
 


Page 137 of 167