Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைப் பணி: ஆக்கிரமிப்புகள் இடிப்பு

Print PDF

தினமணி 17.02.2010

சாலைப் பணி: ஆக்கிரமிப்புகள் இடிப்பு

தஞ்சாவூர், பிப். 16: பட்டுக்கோட்டை நகருக்கான புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் புறவழிச்சாலை தொடங்கி மதுக்கூர் - முத்துக்கோட்டை சாலைகள் மற்றும் கடற்கரைச் சாலை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

இந்தச் சாலை வழியில் அரசுப் புறம்போக்கு நிலம் சுமார் 3 ஏக்கரில் உள்ளது. இதை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, சாகுபடி செய்திருந்த 65 தென்னை மரங்கள் அகற்றப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் (பொ) மு. கருணாகரன் ஆலோசனையின்படி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் மெய்யழகன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்

Last Updated on Wednesday, 17 February 2010 09:34
 

மோசமான ரோடுகளை ஓராண்டுக்குள் சீரமைத்து விடுவோம்: அமைச்சர் உறுதி

Print PDF

தினமலர் 17.02.2010

மோசமான ரோடுகளை ஓராண்டுக்குள் சீரமைத்து விடுவோம்: அமைச்சர் உறுதி

காரியாபட்டி :திருச்சுழி தொகுதியில் உள்ள மோசமான ரோடுகளை ஓராண்டுக்குள் சீரமைத்து முன்மாதிரி தொகுதியாக்க அமைச்சர் தங்கம்தென்னரசு உறுதியளித் துள்ளார்.காரியாபட்டி அருகே உள்ள கம்பாளி,குண்டுகுளம், மனைவியேந்தல், துலுக்கன்குளம், தாமரைக்குளம் கிராமங்களில் அரசு இலவச "டிவி' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 515 பேருக்கு "டிவி'வழங்கி அமைச்சர் தங்கம்தென்னரசு பேசியதாவது: காரியாபட்டி ஒன்றியத்தில் காரியாபட்டி பேரூராட்சி, ஆவியூர் மக்களுக்கு இன்னும் சில தினங்களில் "டிவி' வழங்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதியில் உள்ள மோசமான ரோடுகள் அனைத்தும் ஒராண்டுக்குள் சீரமைக்கப்பட்டு மாநிலத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகச்சாமி, பொன்னுத்தம்பி, போஸ், மாவட்ட துணை செயலாளர் போஸ், ஒன்றிய சேர்மன் சம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர் கூத்தப்பெருமாள், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 05:40
 

சாலை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி 16.02.2010

சாலை அமைக்க பூமி பூஜை

புதுச்சேரி, பிப். 15: புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் சாலை அமைக்க பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

÷லாஸ்பேட்டை தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் பாரதி நகர், நாகம்மாள் நகர் உட்புற வீதிகளுக்கு வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

÷இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சரும், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஷாஜகான் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் வெங்கடேசன், ஊர் பிரமுகர்கள், சீனுவாசன், தினகரன், பத்மநாபன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 05:35
 


Page 140 of 167