Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திண்டுக்கல்லில் சிதைந்து கிடக்கும் 72 ரோடுகள் துணை முதல்வர் தலையிட்டால் பிரச்னை தீரும்

Print PDF

தினமலர் 15.02.2010

திண்டுக்கல்லில் சிதைந்து கிடக்கும் 72 ரோடுகள் துணை முதல்வர் தலையிட்டால் பிரச்னை தீரும்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி காரணமாக நொறுங்கி கிடக்கும் 72 ரோடுகளை புதுப்பிக்க துணை முதல்வர் கவனம் அவசியம் தேவைப்படுகிறது.திண்டுக்கல்லில் 90 கி.மீ., தூரம் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதில் 36 கி.மீ., பணிகள் முடிந்துள்ளது.72 ரோடுகள் தோண்டப் பட்டுள்ளன. முக்கியமான ரோடுகளாக இவை அமைந்துள்ளதால் நகரில் போக்குவரத்திற்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.டூ வீலர், வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இந்த ரோடுகளை சீரமைக்க நகராட்சி 21 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்துள் ளது. தற்போது 14 கி.மீ., நீளம் உள்ள 18 ரோடுகள் 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகின்றன.மீதம் உள்ள 54 ரோடுகளை சீரமைக்க நிதி வந்தால் மட்டுமே முடியும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நிதி வர தாமதம் ஆனால் பொதுமக்களே பெரும் தவிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது.நகராட்சி நிர்வாகம் இந்த நிதியை பெற் றுத் தர வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மூலம் துணை முதல்வரிடம் முறையீடு செய்துள்ளது.

துணை முதல்வரும் 21 கோடி ரூபாய் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார் என நகராட்சி கூறுகிறது.ஆனால் மீதமுள்ள பணம் எப்போது வரும் என்பது குறித்து அதிகாரிகளுக்கே தெரியவில்லை. எனவே தற்போது உள்ள நிலையில் ரோடுகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர். இந்த சந்தேகத்தை தீர்த்து மக்களின் தவிப்பை போக்கும் வகையில் துணை முதல்வர் நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு நிதியை விரைவாக பெற்று தந்து ரோடுகளை சீரமைத்து மக்களுக்கு நிம்மதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Monday, 15 February 2010 07:33
 

கோவை 42-வது வார்டில் செம்மொழி மாநாடு நிதியில் தார்சாலை அமைக்கும் பணி சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 12.02.2010

கோவை 42-வது வார்டில் செம்மொழி மாநாடு நிதியில் தார்சாலை அமைக்கும் பணி சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார்

கோவை, பிப். 12-

கோவை மாநகராட்சி 42-வது வார்டில் நாயக்கர் தோட்டம் முதல் நாடார் வீதி வரை ரூ.7 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்படுகிறது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டு நிதியில் இருந்து இந்த பணி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த சாலை ஏற்கனவே 60 அடி திட்ட சாலையாக இருந்தது. 300 மீட்டர் நீளம் இந்த சாலை அமைக் கப்படுகிறது. பணியை சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிதியில் இருந்து தொடங்கப்பட்ட முதல் பணி இதுவாகும்.

இதில் என்ஜினீயர் கணேசன், காண்டிராக்டர் அம்மாசியப்பன் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

ரூ.31 கோடியில் 71 புதிய சாலைகள் : செம்மொழி மாநாடுக்கு மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 09.02.2010

ரூ.31 கோடியில் 71 புதிய சாலைகள் : செம்மொழி மாநாடுக்கு மாநகராட்சி திட்டம்

கோவை : ""உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவை நகரில் 71 பகுதிகளில் 31 கோடி ரூபாயில் புதிய சாலைகள் அமைக்கப்படும்,'' என, மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

அவர் நேற்று அளித்த பேட்டி: கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. இதில் பங்கேற்க, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழ் அறிஞர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் போது கோவை வந்து செல்வோர் வசதிக்காக, சாலைகள் செப்பனிடப்படுகின்றன. சில இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. நகரில் 71 பகுதிகளிலுள்ள சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.மேலும், லட்சுமி மில்ஸ் சந்திப்பு, விமான நிலைய சந்திப்பு உள்ளிட்ட 32 இடங்களிலுள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். உள்ளூர் திட்டக்குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.5 லட்சம் ரூபாயில் ஆவராம்பாளையம் சின்னசாமிநாயுடு ரோட்டிலிருந்து நவஇந்தியா பகுதி வரையும், மசக்காளிபாளையத்திலிருந்து ரங்கவிலாஸ் மில் வரையும் திட்டச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும், 16 வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு, திருமகள் நகரில் ஒரு ஏக்கரில் 33.5 லட்சம் ரூபாயில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பூங்கா, வரும் 14 ம் தேதி திறக்கப்படுகிறது; இதில், அமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் மக்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் ஏற்படுத்தப்படும். இதற்காக, 3.46 கோடி ரூபாயில் 50 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும். மாநாட்டுக்கு பின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்படும். இந்த கழிப்பறைகளை பயன்படுத்த கட்டணம் கிடையாது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முக்கிய பகுதிகளில், மாநகராட்சி மற்றும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு முத்திரை ஆகிய இரண்டையும் ஒட்டி விளம்பரப்படுத்தும் பணி விரைவில் துவங்கும்.இவ்வாறு, மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார். பேட்டியின் போது, துணைமேயர் கார்த்திக் உடனிருந்தார

Last Updated on Tuesday, 09 February 2010 10:07
 


Page 141 of 167