Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

களியக்காவிளை பேரூராட்சியில் புதிய சாலை அமைப்பு

Print PDF

தினமணி 08.02.2010

களியக்காவிளை பேரூராட்சியில் புதிய சாலை அமைப்பு

களியக்காவிளை
, பிப். 7: களியக்காவிளை பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா திறந்து வைத்தார்.

களியக்காவிளை பேரூராட்சி 12-வது வார்டு பகுதியில் உள்ள நேசன் சாலையில், கான்கிரீட் தளம் அமைக்க பேரூராட்சி மன்றம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன் பணி முடிவடைந்தது.

இச்சாலையின் ஒரு பகுதியில் இருந்து பனங்காலை செல்லும் பாதையை அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணியை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் செய்தனர். இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எம்.எஸ்.. கமால் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:13
 

பேரூராட்சி சார்பில் பைபாஸ் ரோடு சீரமைப்பு

Print PDF

தினமலர் 04.02.2010

பேரூராட்சி சார்பில் பைபாஸ் ரோடு சீரமைப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பாஸ் ரோட்டை சீரமைக்கு பணி பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் இருந்து காய்கறி மார்க்கெட்டை இணைக்கும் வகையில் ஒரு பைபாஸ் ரோடு செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் செல் கின்றன. தாராபுரம் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டை அடைவதற்கு குறுகிய தூரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிக அளவு இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக ரோட் டின் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் காணப் பட்டன. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக இருந் தது. இதனையடுத்து மார்க் கெட் பைபாஸ் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ளோர் கோரிக் கை விடுத்தனர். இதனால்பேரூராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

Last Updated on Thursday, 04 February 2010 06:27
 

தென்காசி 10வது வார்டில் சாலைப் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 02.02.2010

தென்காசி 10வது வார்டில் சாலைப் பணி தீவிரம்

தென்காசி: தென்காசி மேலப்பாறையடி தெருவில் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பெரும்பாலான ரோடுகள், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்றனர். நகராட்சி 10வது வார்டு பகுதியில் முறையான கழிவு நீர் வாறுகால் இல்லாததால் கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கழிவு நீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி கிடந்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தியது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடுகளின் நிலை இருந்தது.

இதுபற்றி தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து வார்டு கவுன்சிலர் வேல்விழியும் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார். இப்பகுதி பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் நகராட்சி நிர்வாகம் 10வது வார்டு பகுதியில் வாறுகால் அமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் கான்கிரீட் அமைத்து வாறுகால்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வார்டில் மேலப்பாறையடி தெருவில் தார் ரோடு அமைக்கும் பணி 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது.

Last Updated on Tuesday, 02 February 2010 06:30
 


Page 142 of 167