Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ரூ. 12 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

மாலை மலர் 29.01.2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ரூ. 12 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு பணிகள்; மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

கோவை, ஜன. 29-

கோவை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது. மேயர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி ஜோதிபாசு மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகராட்சியில் 13 வருடம் டைப்பிஸ்டாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அகிலாண்டேஸ்வரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் 31 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ரூ. 12 கோடியே 85 லட்சம் செலவில் சாலை கள் சீரமைப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேறியது.

கூட்டத்தில் மேயர் வெங்கடாசலம் பேசியதாவது:-

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. சில பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரத்யேக பணிகளான சாலையோர பூங்கா, நடை பாதை, விளக்கு கோபுரம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

சில பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் சிறப்பாக நடைபெற கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு மேயர் வெங்கடாசலம் பேசினார்.

கவுன்சிலர் புருசோத் தமன்:- 1 முதல் 22 வரை உள்ள தீர்மானத்தில் அனைத்து பணிகளும் நிறைவேற்ற எந்த தடையும் இல்லை என பொருள் உள்ளது. 12 கோடியே 85 லட்சம் செலவில் பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எல்லாபணிகளும் கிழக்கு பகுதியிலே நடக்கிறது. வேறுபகுதியில் குறிப்பிட்ட பணிகள் நடைபெறவில்லை. மற்ற பகுதி புறக்கணிக்கப்படுகிறது. மேயர் எல்லா பகுதியிலும் பணி நடைபெறும் என கூறினார். சில பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

அன்சுல் மிஸ்ரா:- (ஆணை யாளர்) உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து பிரதான பணிகளும் மேம்படுத்தப்படும். நாட்கள் குறைவாக இருப்பதால் முக்கிய சாலைகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது சாலைகள் தார்சாலைகளாக மாற்றி அனைத்து பணிகளும் மேற் கொள்ளப்படும்.

எம் நடராஜ்:-(.தி.மு.) எனது 52-வது வார்டு சலிவன் வீதி வழியாகதான பேரூர், மருதமலைக்கு போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் அங்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவில்லை அதிகாரிகள்தான், நெடுசாலை எது எது என்பது குறித்தும் கணக்கெடுத்து சொல்ல வேண்டும்.

கிருஷ்ணமுர்த்தி:- (நகரமைப்பு குழு தலைவர்) மருதமலை, தடாகம் ரோடு, சுக்கிரவார்பேட்டை, ரங்கே கவுடர் வீதி சந்திப்பு, பூ மார்க்கெட் பகுதி டாக்டர் நஞ்சப்பா சாலை, ஒப்பணக்கார வீதி பகுதியில் அபிவிருத்தி பணிகளை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

மாநகராட்சி கூட்டத்தில பூ மார்க்கெட், அண்ணா மார்க்கெட், வாழைக்காய் மண்டி மார்க்கெட்டுகளில் லாரி மற்றும் இருசக்கர வாகன கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடர் பான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

48-வது வார்டில் மேதவர் காலனி மக்களின் 50 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுத்த மேயர், துணைமேயர், அனையாளர் ஆகியோருக்கு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.

தியாகிகள் தினத்தையொட்டி மேயர் வெங்கடாசலம் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் துணை ஆணையாளர் சாந்தா, ஆளும்கட்சி தலைவர் ஆர்.எஸ். திருமுகம், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து, நகரமைப்பு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிதி குழு தலைவர் நந்தகுமார், கணக்கு குழு தலைவர் தமிழ் செல்வி, மண்டல தலைவர்கள் பைந்தமிழ்பாரி, செல்வராஜ், எஸ்.எம். சாமி, பத்மநாபன், தி.மு.. கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ்,

ஜானகி நாகராஜ், சுப்பிரமணியம், மீனா லோகநாதன், சேதுராமன், ராஜேந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஷோபனா, காயத்ரி, செந்தில், சீனிவாசன், .தி.மு.. கவுன்சிலர்கள் கணபதி ராஜ்குமார், நடராஜ், சந்திரன், பிரபாகரன், சின்னத்துரை, ஆதிநாராயணன், மெகர்பான், தே.மு.தி.. கண்ணதாசன், பாரதிய ஜனதா கோமதி, .டி. ராஜன், சுயேச்சை கவுன்சிலர்கள் சம்பத்குமார், ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அருப்புக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி 28.01.2010

அருப்புக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

அருப்புக்கோட்டை, ஜன. 27: அருப்புக்கோட்டை நகரில் ரூ. 2 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை நகரில், விருதுநகர் ரோடு, திருச்சுழி ரோடு,கருப்பணசாமி கோயில் ரோடு ஆகியவை சேதமுற்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதம் கருப்பணசாமி கோயில் சாலை ரூ. 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவடி தோப்பிலிருந்து பந்தல்குடி சாலை எம்.எஸ். கார்னர் வரை சுமார் ரூ. 2 கோடியில் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரசு பணம் ஒதுக்கியது.

அதைத் தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பாவடித்தோப்பிலிருந்து எம்.எஸ். கார்னர் வரை சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: இந்த பாவடிதோப்பு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கி பணி துவக்கப்பட்டுள்ளது. இப் பணி முடிந்து பஸ் போக்குவரத்து தொடங்கிய பின்னர், எம்.எஸ். கார்னரிலிருந்து தேவாங்கர் கல்லூரி வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும்.

அதன் பிறகு, நகரின் முக்கியச் சாலைகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக அருப்புக்கோட்டை நகரில் அனைத்து வார்டு மக்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Thursday, 28 January 2010 09:57
 

ரூ.17 லட்சத்தில்சாலை பணி துவக்கம்

Print PDF

தினமலர் 28.01.2010

ரூ.17 லட்சத்தில்சாலை பணி துவக்கம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத் தார்.பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவிலிருந்து அன்னங்கோவிலுக்கு நேரடியாக சென் றிட நபார்டு திட்டத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப் பில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத் தார். அவருடன் துணை சேர்மன் செழியன், தி.மு.., நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், அருள்வாசகம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 28 January 2010 06:13
 


Page 143 of 167