Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைகள் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பு நிலம் தானம்

Print PDF

தினமணி 22.01.2010

சாலைகள் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பு நிலம் தானம்

திருப்பூர், ஜன.21: புதிய சாலைகள் அமைப்பதற்காக ரூ.1.5 கோடி மதிப்புடைய தனியார் நிலங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தானமாக வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகரை அழகுபடுத்தும் பணியின் ஒருபகுதியாக மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதுடன், புதிய சாலைகளும் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, மங்கலம் சாலைக்கு வலதுபுறம் ஆலாங்காடு அறிவுத்திருக்கோயில் பகுதியில் இருந்து பாரப்பாளையம் வடக்குத்தோட்டம் வரை நொய்யல் ஆற்றுக்கு தென்புறம் சுமார் 1 கி.மீ நீளத்தில் 30 முதல் 50 அடி அகலத்தில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அப்பகுதியுள்ள தனியார் நிலங்களை மாநகராட்சி நிர்வாகம் தானமாகப் பெற்று வருகிறது.

முதற்கட்டமாக, மாடர் டையிங் உரிமையாளர் சரோஜினிவெள்ளியங்கிரி 100 அடி நீளம், 30 அடி அகலம் என 3000 சதுர அடி நிலத்தை மாநகராட்சியிடம் தானமாக ஒப்படைத்தார். அதன்தொடர்ச்சியாக, தற்போது அப்பகுதியைச் சேர்ந்த ஈ.பத்மஜெயந்தி என்பவர் 9,000 சதுரஅடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

தானமாக பெறப்பட்ட இந்நிலங்களின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி.இந்நிலங்களின் கிரயப்பத்திரத்தை மேயர் க.செல்வராஜிடம் 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்.கணேஷ் ஒப்படைத்தார். அப்போது, துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, அதிமுக மாமன்ற குழுத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 22 January 2010 10:58
 

சிமென்ட் சாலை போடும் பணி ஆய்வு

Print PDF

தினமணி 22.01.2010

சிமென்ட் சாலை போடும் பணி ஆய்வு


திருத்தணி, ஜன. 21: திருத்தணியில் சிமென்ட் சாலை போடும் பணியை நகரச் செயலர் எஸ். சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். திருத்தணியில் ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் ரூ.10 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச் சாலை அமைக்கும் பணியை திருத்தணி நகரச் செயலர் எஸ். சந்திரன் மற்றும் நகராட்சி பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் துரைக்கண்ணு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, சிமென்ட் கலவை மற்றும் சாலையின் அளவு ஆகியவற்றை பார்வையிட்டனர். சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் முடிந்தவுடன், சாலையின் இருபுற வளைவுகளில் அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருத்தணி நகர 6-வது வார்டு வட்ட பிரதிநிதி குமரவேல் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 22 January 2010 10:46
 

மனசு ரொம்ப பெரிசு: ரோடு போடுவதற்காக ரூ.1.5 கோடி இடம் தானம்

Print PDF

தினமலர் 22.01.2010

மனசு ரொம்ப பெரிசு: ரோடு போடுவதற்காக ரூ.1.5 கோடி இடம் தானம்

திருப்பூர் : திருப்பூர் மங்கலம் ரோட்டுக்கு வடபுறம் ஆலாங்காடு அறிவு திருக்கோவில் பகுதியில் இருந்து பாரப்பாளையம் வடக்கு தோட்டம் வழியாக, மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையில் தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் காக, தனியார் ஒருவர் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 9,000 சதுர அடி இடத்தை தானமாக கொடுத்துள் ளார். இதற்கான தானக்கிரைய பத்திரம், மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மங்கலம் ரோட்டுக்கு வடபுறம் ஆலாங் காடு பகுதியில் அறிவு திருக்கோவில் உள்ளது. இவ் வழியாக, மாடர்ன் டையிங் வரை மண் ரோடு உள் ளது. இவ்வழியாக புதிதாக தார் ரோடு அமைத்து வாகன போக்குவரத்துக்கு வழி செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2005ல் ஆக., 28ம் தேதி, "மாடர்ன் டையிங்' உரிமையாளர் சரோ ஜினியிடம் இருந்து 100 அடி நீளம்; 30 அடி அகலத் தில் 3,000 சதுர அடி நிலம் தானமாக பெறப்பட்டது. தற்போது, ஆலாங்காடு ஈஸ்வரமூர்த்தி மனைவி பத்மஜெயந்தி, அப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைக்க, 30 அடி அகலம்; 300 அடி நீளத்தில் 9,000 சதுர அடி நிலத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்கான தானக்கிரைய பத்தி ரத்தை, மேயர் செல்வராஜ், துணை மேயர் செந்தில் குமார், கமிஷனர் ஜெயலட்சுமியிடம், 29வது வார்டு கவுன்சிலர் கணேஷ் நேற்று ஒப்படைத்தார்.

புதிதாக தார் ரோடு அமைக்க, "மாடர்ன் டையிங்' உரிமையாளரிடம் பலமுறை பேச்சு நடத்தி, இடத்தை தானமாக பெற்றுக்கொடுக்க முயற்சித்த எம்.பி., சிவசாமிக்கும், தற்போது, பத்மஜெயந்தி யிடம் இடத்தை தானமாக பெற முயற்சித்த மேயர், துணை மேயருக்கும் கருவம்பாளையம் பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆலாங்காடு அறிவு திருக்கோவில் பகுதியில் இருந்து வடக்கு தோட்டம் வழியாக, மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையில் தார் ரோடு அமைக் கும் போது, மங்கலம் ரோட்டுக்கு மாற்றுப் பாதை யாக இப்புதிய ரோடு அமையும். மங்கலம் ரோட் டில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். தானமாக இடம் கிடைத்ததை தொடர்ந்து, ஆலங் காடு வழியாக ஒரு கி.மீ., தூரத்துக்கு, 30-50 அடி அகலத்தில் புதிதாக தார் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளத.

Last Updated on Friday, 22 January 2010 08:06
 


Page 144 of 167