Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ராயனூர் - செல்லாண்டிபாளையம் சாலை அமைக்க தாந்தோணி நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 21.01.2010

ராயனூர் - செல்லாண்டிபாளையம் சாலை அமைக்க தாந்தோணி நகராட்சி முடிவு

கரூர்:கரூர் ராயனூரில் இருந்து செல்லாண்டிபாளையத்திற்கு தார் சாலை அமைக்க தாந்தோணி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தாந்தோணி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் ரேவதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வசந்தாமணி முன்னிலை வகித்தார்.

செயல்அலுவலர் தெய்வசிகாமணி வரவேற்றார்.கூட்டத்தில் நகராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் 2009-10ம் ஆண்டில் 12வது நிதிக்குழுத்திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு தொகைக்கு திட்ட விதிமுறைகளின்படி 50 சதவீதம் தொகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும், 25 சதவீதம் நிதி கால்வாய் மற்றும் சாலைப்பணிகள் செய்யவும், 25 சதவீதம் நிதி மின் கட்டணம் மற்றும் டேடா அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சாலைப்பணிகளில் ராயனூரில் இருந்து செல்லாண்டிபாளையம் வரையும், தாந்தோணிமலையில் இருந்து முத்துலாடம்பட்டி வரையும் தார் சாலை அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும். சுங்ககேட் பகுதியில் சாலை திருப்பு முனையில் உள்ள சாக்கடையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

கரூர் பார்லி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8வதுவார்டு ஜீவாநகர் விநாயகர் கோயில் அருகில் 60 அடி சாலையில் ரேஷன் கடை கட்ட வேண்டும். கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் பழுது ஏற்பட்டதால் புதிய மின் மோட்டார் பொருத்த வேண்டும்.

மாவட்ட போலீஸ் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை குடியிருப்புகள் இடையே உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற பொது நிதியில் வேலை செய்யும் போது வேலை செய்யவும், .அருகம்பாளையத்தில் உள்ள கதிர் அடிக்கும் களம் பழுதடைந்துள்ளதால் அந்த துறைக்கு சம்பந்தபட்டவர்களை அணுகி பழுதடைந்த களத்தை இடித்து மாற்றிட கோரிக்கைவிட வேண்டும்.

நகராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கருப்பக்கவுண்டன் புதூரில் ரேஷன் கடை ரூபாய் 3 லட்சத்தில் கட்டுதல், தில்லை நகர் மேல்புறம் முதல் ராயனூர் வரை ரூபாய் 8.50 லட்சத்தில் தார் சாலை அமைத்தல், சுக்காலியூரில் ரூபாய் 6 லட்சத்தில் 2 பொது கழிப்பிடம் அமைத்தல், காந்திகிராமம் சக்திநகரில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் ரூபாய் 2 லட்சத்தில் அமைத்தல், கட்டளை மெயின்லைனில் ரூபாய் 50 ஆயிரத்தில் வால்வு அமைத்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நகராட்சி தலைவர் ரேவதி பேசியதாவது:நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாந்தோணி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற குடிநீர் வடிகால் வாரியம் கோரியபடி விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

கணபதிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவியதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொசுப்புளு தடுப்பு பணிக்கு மருந்து தெளிப்பதற்கு தினக்கூலி அடிப்படையில் 10 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள், பக்தர்களின் நலன் கருதி கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் அருகில் வடிகால் ரூபாய் 48 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Last Updated on Thursday, 21 January 2010 07:36
 

ரூ. 37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும்

Print PDF

தினமணி 20.01.2010

ரூ. 37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும்

நாகர்கோவில், ஜன.19: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் மாதத்துக்குள் ரூ.37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும் என, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரில் அமைக்கப்பட்டுவரும் சுரங்க நடைபாதைப் பணிகளை விரைவில் முடிக்கவும், இதுபோல, நகரில் தேவையான இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தாஸ், வெள்ளையா, நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டப் பொறியாளர் பழனியப்பன், நகர டி.எஸ்.பி. ஸ்டீபன் ஏசுபாதம், அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சாம் ஜெயராஜ், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிவச்சந்திரன், மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:30
 

மற்றொரு சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி 09.01.2010

மற்றொரு சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

அம்பாசமுத்திரம், ஜன.18: வீரவநல்லூரில் ரூ.88 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வீரவநல்லூர் மோர் மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கொட்டாரக்குறிச்சி வரை 2.8 கி.மீ. தொலைவில் சாலை அகலப்படுத்தி சீரமைக்கப்படுகிறது. மேலும் 6 சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன.

இப் பணியை பா. வேல்துரை எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சிக்கந்தர்மீரான், உதவி பொறியாளர் பி. முருகப்பெருமாள், சு. கிருஷ்ணன், துரைராஜ், ஆ. மாரித்துரை, வி.பி.எஸ். பாண்டியன், எஸ். சொரிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் ஆ. முருகேசன், கிளிப்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 11:14
 


Page 145 of 167