Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தரமான சாலையை உறுதி செய்ய கண்காணிப்புப் பணியில் பொறியாளர்: மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி 31.12.2009

தரமான சாலையை உறுதி செய்ய கண்காணிப்புப் பணியில் பொறியாளர்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, டிச. 30: சென்னை மாநகரில் தரமான சாலை அமைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணியில் மாநகராட்சி பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகரில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, தலைமைப் பொறியாளர் (பொது) முருகேசன், மேற்பார்வை பொறியாளர் மதியழகன், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

சென்னையில் 10 மண்டலங்களில் பழுதடைந்துள்ள சாலைகள் வரும் ஜனவரி 2}ம் தேதி முதல் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ரூ. 45.83 கோடி செலவில் இந்த சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதில் 313 உட்புறச் சாலைகள் ரூ. 14.54 கோடி செலவிலும், 85 பஸ் வழிச் சாலைகள் 21.29 கோடி செலவிலும், சாலை ஒட்டுப் பணிகள் ரூ. 10 கோடி செலவிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாலைகளின் தரம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. எனவே தரத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள மத்திய வெப்பத் தார் கலவை நிலையத்தில் சுழற்சி முறையில் இளநிலை பொறியாளர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இதுபோல் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கண்காணிக்கவும், மாநகராட்சி பொறியாளர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளையும் இவர்கள் விழிப்புடன் கண்காணிப்பர். ஒப்பந்ததாரர்கள் தார்க் கலவை பெறும் தனியார் நிறுவனத்திலும், மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு மேற்கொள்வர்.

ஒப்பந்ததாரர்கள் தனியாரிடத்தில் எந்த அளவில் தார்க் கலவையை வாங்குகின்றனர் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் மேயர்.

Last Updated on Thursday, 31 December 2009 10:21
 

சென்னையில் 10 மண்டலங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஜனவரியில் முடிவடையும் மேயர் தகவல்

Print PDF
தினத்தந்தி 31.12.2009

ÙNÁÛ]›¥ 10 UPXjL¸¥ TµRÛP‹R NÖÛXLÛ[ qWÛUeh• T‚L• ^]Y¡›¥ ˜zYÛP• ÚUVŸ RLY¥

ÙNÁÛ], zN.31-ÙNÁÛ]›¥ 10 UPXjL¸¥ Tµ‰ AÛP‹R NÖÛXLÛ[ TWÖU¡eh• T‚L• ^]Y¡›¥ ˜zYÛP• GÁ¿ ÚUVŸ UÖ.r‘WU‚VÁ i½]ÖŸ.

iyP•

ÚUVŸ UÖ.r‘WU‚VÁ RÛXÛU›¥ NÖÛXLÛ[ qWÛUT‰ ÙRÖPŸTÖL BÚXÖNÛ]e iyP• ÙNÁÛ] UÖSLWÖyp›¥ SÛPÙT¼\‰. C‹R iyP†‡¼h L–c]Ÿ WÖÚ^Ð XeLÖ ˜ÁÂÛX Yf†RÖŸ. C‹R iyP†‡¥ RÛXÛU ÙTÖ½VÖ[Ÿ(ÙTÖ‰) ˜£ÚLNÁ, ÚU¼TÖŸÛY ÙTÖ½VÖ[Ÿ U‡VZLÁ, AÛ]†‰ UPX A¨YXŸL•, ÙNV¼ÙTÖ½VÖ[ŸL• LX‹‰ ÙLցP]Ÿ.

iyP†‡¥ ÚUVŸ UÖ.r‘WU‚VÁ ÚTpVRÖY‰:-

ÙNÁÛ]›¥ 10 UPXjL¸¥ TµRÛP‹R NÖÛXLÛ[ ÚTÖŸeLÖX AzTÛP›¥ qŸ ÙNšV ÚY|•. RW• h½†‰ «UŸN]jL• Gµ‹‰•[RÖ¥ AY¼Û\ LLÖ‚eL U†‡V ÙYT†RÖŸLXÛY ŒÛXV†‡¥ rZ¼p ˜Û\›¥ C[ŒÛX ÙTÖ½VÖ[ŸL• T‚ ÚU¼ÙLց| «³"PÁ LLÖ‚eL ÚY|•. AÚR ÚTÖÁ¿ JT‹RRÖWŸL• ™X• ÚU¼ÙLÖ•[T|• NÖÛXT‚L¸Á RÖŸeLXÛYL• RW• h½†‰ ÚNÖRÛ] ÙNšV ÚY|•.

^]Y¡›¥ ˜z•

ÙNÁÛ]›¥ 10 UPXjL¸¨• NÖÛXL• TµRÛP‹‰•[ÛR EP]zVÖL N¡ ÙNš• T‚›Û] N•T‹RTyP A¨YXŸL• ÚU¼ÙLÖ•[ ÚY|•. ÙTÖ‰UeL•, SÖ¸R²L¸¥ Y£• "LÖŸL• EP]zVÖL ˆŸ° LÖQ ÚY|•. CW° ÚSWjL¸¥ ÚU¼ÙLÖ•[T|• NÖÛX T‚LÛ[ UÖSLWÖyp ÙTÖ½VÖ[ŸL• «³"PÁ LLÖ‚eL ÚY|•.

ÙNÁÛ]›¥ 10 UPXjL¸¥ 802 NÖÛXL¸¥ rUÖŸ 3 CXyN†‰ 21 B›W†‰ 733 N‰W —yPŸ A[«¥ TµRÛP‹‰•[ Jy|T‚L• EP]zVÖL ¤TÖš 10 ÚLÖz ÙNX«¥ ÚU¼ÙLÖ•[T|f\‰. AÚR ÚTÖÁ¿ 10 UPXjL¸¨• 313 Ey"\o NÖÛXL• ¤TÖš 14.54 ÚLÖz›¨•, 85 ÚT£‹‰ NÖÛXL• ¤TÖš 21.29 ÚLÖz›¨• G] ÙUÖ†R• ¤TÖš 35.83 ÚLÖz ÙNX«¥ NÖÛXL• qWÛUeh• T‚ ÚU¼ÙLÖ•[T|f\‰. BL ÙUÖ†R• Jy| T‚LÛ[• ÚNŸ†‰ ¤TÖš 45.83 ÚLÖz›¥ ÙNÁÛ]›¥ NÖÛXLÛ[ qWÛUeh• T‚L• Y£• 2-‹ ÚR‡ ˜R¥ ÚTÖŸeLÖX AzTÛP›¥ SÛPÙT¿f\‰. C‹R T‚L• Y£• ^]Y¡ UÖR†‡¼h• ˜zeLTP ÚY|•.

CªYÖ¿ AYŸ ÚTp]ÖŸ.

Last Updated on Thursday, 31 December 2009 08:16
 

சேலம் மாநகராட்சியில் 7 இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை

Print PDF

தினமலர் 31.12.2009

சேலம் மாநகராட்சியில் 7 இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் ஏழு இடங்களில் 50 லட்சம் ரூபாய் செலவில் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியின் பல இடங்களில் மண்சாலைகள் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்குட்பட்ட காயத்திரி நகர் பகுதியில் ஆறு லட்சம் ரூபாய் செலவிலும், எட்டாவது வார்டுக்குட்பட்ட நித்தியா நகர் குறுக்கு தெரு 2 மற்றும் ராமநாதபுரம் குறுக்கு தெரு 2 ஆகிய பகுதியில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஆறாவது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் குறுக்கு தெரு பகுதியில் 18 லட்சம் ரூபாய் செலவிலும், ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட வெங்கடாசலம் காலனியில் 12 லட்சம் ரூபாய் செலவிலும், 19வது வார்டுக்குட்பட்ட மிட்லண்ட் நகரில் ஏழு லட்சம் ரூபாய் செலவில் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், 43வது வார்டுக்குட்பட்ட புதுத்தெரு 1, 2, சன்னியாசி குண்டு மெயின்ரோடு, வள்ளலார் தெரு, இட்டேரி ரோடு ஆகிய பகுதியில் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும், 50வது வார்டுக்குட்பட்ட எஸ்.கே., கார்டன் குறுக்கு ரோடு முதல் மேட்டு வெள்ளலார் தெரு வரை ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் மண் சாலையை தார்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Thursday, 31 December 2009 06:42
 


Page 150 of 167