Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மாநகராட்சியில் பல்வேறு இனங்களில் தொடர்கிறது வருவாய் 'கசிவு': 'ஓட்டை அடைக்கப்பட்ட' ரிங் ரோட்டில் வசூல் உயர்வு

Print PDF

தினமலர் 30.12.2009

மாநகராட்சியில் பல்வேறு இனங்களில் தொடர்கிறது வருவாய் 'கசிவு': 'ஓட்டை அடைக்கப்பட்ட' ரிங் ரோட்டில் வசூல் உயர்வு

மதுரை: மதுரை மாநகராட்சியில் பல்வேறு இனங்களில் வருவாய் "கசிவு' (ரெவின்யூ லீக்கேஜ்) இன்னும் தொடர்கிறது. முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதால் ரிங் ரோடு டோல்கேட்டுகளில் வருவாய் உயர்ந்துள்ளது.

நிதி நெருக்கடியில் மதுரை மாநகராட்சி சிக்கித் தவிப்பதற்கு சொத்து வரி நிலுவை, புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயிக்கப்படாதது போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், பல்வேறு இனங்களில் வருவாய் "கசிவு' உள்ளது. முதல் "கசிவாக' லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தது, ரிங் ரோடு, "டோல் கேட்' முறைகேடு. ரசீது தராமல் குறைவான பணத்தை பெற்றுக்கொண்டு, பல வாகனங்கள் டோல் கேட் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் ஓரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்குப் பிறகு குழுக்கள் அமைத்து அதிகாரிகளே நேரடியாக "டோல் கேட்'டுகளை கண்காணிக்கின்றனர். தற்போது "டோல் கேட்'டுகளில் வருவாய் அதிகரித்து உள்ளது. உதாரணமாக 26.12.2009 அன்று ஒரு நாள் மட்டும் 75 ஆயிரம் ரூபாய் வசூல் அதிகரித்துள்ளது. மற்ற நாட்களிலும் எவ்வளவு அதிகரித்துள்ளது என அதிகாரிகள் கணக்கிட்டு
வருகின்றனர்.

வெள்ளக்கல் "கசிவு': மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளக்கல் கழிவு நீர் பண்ணையில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆட்டோ, டிராக்டர், லாரிகளில், காண்ட்ராக்ட் அடிப்படையில் அள்ளப்படும் குப்பை, வெள்ளக் கல்லுக்கு கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன. அங்குள்ள எடைமேடையில் இவை எடை போடப்பட்டு, காண்ட்ராக்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். இவற்றையும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தை (டெக்ஸ்கோ) சேர்ந்தவர்கள் எடைபோட்டு, கணக்கு வைக்கின்றனர். குப்பை லாரிகளில் சில, ஓட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, ஓடியதாக கணக்கு காட்டப்பட்டு டீசல் பெறப்படுகிறது. எடையில் "அனுசரித்து போக,' மற்ற லாரிகளிடம், ஒரு டிரிப் புக்கு 50 ரூபாய், பெறப்படுகிறது. இந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கை மாறுகிறது. ஓடாத லாரிகளுக்காக பெறப்படும் டீசல், வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.

இல்லாத பதவிக்கு சம்பளம்: மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல்குளம், ராஜாஜி பூங்காவில் முன்பு "டெக்ஸ்கோ'வை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இவை இரண்டும், தனியார் பராமரிப்பில் விடப் பட்ட பிறகு, "டெக்ஸ்கோ'வை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இருப்பினும் இங்கு பணிபுரிவதாக மூன்று"டெக்ஸ்கோ' ஊழியர்களுக்கு தொடர்ந்து மாதம் 8396 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இது போல் ஆங்காங்கே பல "வருவாய் கசிவு'கள் உள்ளன. இந்த "ஓட்டைகளை' எல்லாம் அடைத்தால் தான் நிதி நிலைமையை சரி செய்ய முடியும். இல்லாவிட்டால், நிதி நிலையை காரணம் காட்டி வரி உயர்வு என, மக்கள் தலையில் தான் சுமையை ஏற்ற நேரிடும்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:01
 

ரூ.35 லட்சம் செலவில் தரமான சாலைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 26.12.2009

ரூ.35 லட்சம் செலவில் தரமான சாலைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

திருச்சி: திருச்சி மாநகரில் தரமான ரோடுகளை உருவாக்கும் வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்தில் தென்னூர் உழவர் சந்தையில் பரீட்சார்த்த முறையில் புதிய சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக திருச்சி மாறி வருகிறது. ஆகையால் மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தையும் தரமானதாக மாற்ற மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநகரின் பல இடங்களில் மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் மூலம் போடப்படும் புதிய சாலைகள் சில காலத்திலேயே மீண்டும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு தரமற்றதாக இருக்கிறது.

இதுகுறித்து ஒப்பந்தக்காரர்களிடம் மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால் மாநகரின் பல இடங்களில் தரமான சாலைகள் அமைப்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மாநகரில் தரமான, நீடித்த உழைக்கும் சாலைகளை அமைக்க அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் படி தார்ச்சாலைகள் அமைக்கும் இடத்தை மூன்றடி பள்ளம் தோண்டி, அதில் மணல், ண்ணாம்பு, மணல் என்ற வரிசைப்படி பள்ளம் நிரப்பப்படுகிறது. அதன்பின் வெட்மிக்ஸ் (ஜல்லி, டஸ்ட், சிமெண்ட் கலவை) போட்டு பேவர் எந்திரம் மூலம் தார்ச்சாலை அமைப்படும். இவ்வாறு அமைக்கப்படும் தார்ச்சாலைகள் மழை, வெயில் என்று எல்லாவிதமான கால சூழ்நிலைகளையும் தாங்கும் திறன் கொண்டது. ஆகையால், அப்படிப்பட்ட சாலைகளை மாநகர் முழுவதும் போட மாநகராட்சி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு வருகிறது. அதேசமயம், புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் சாலைகள் தரமானதாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க முதல்கட்டமாக தென்னூர் உழவர் சந்தை சாலையில் 300 மீட்டர் மட்டும் புதிய தொழில்நுட்பத்டைத பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உழவர் சந்தை ரோட்டில் அடிக்கடி பழுதடையும் 300 மீட்டர் தூரம் மட்டும் புதிய தொழில்நுட்பத்தில் ரோடு அமைக்கும் பணி 35 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சியின் இளநிலை பொறியாளர் ஜெகஜீவன்ராம் கூறியதாவது: புதிய தொழில்நுட்ப முறையில் மாநகரில் தரமான சாலைகள் அமைக்கும் வகையில், அந்த தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வகையில் உழவர் சந்தை ரோட்டில் 300 மீட்டர் மட்டும் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் அருகில் உய்யகொண்டான் ஆற்றின் கரை வருவதால், அதற்கு ஏற்றாற்போல் திட்டமிடப்பட்டு ரோடு போடும் பணி நடந்து வருகிறது. புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் சாலை திருப்தி அளிக்கும் பட்சத்தில் மாநகர் முழுவதும் இதுபோன்ற சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

திண்டுக்கல்லில் 46 ரோடுகள் சீரமைப்பு

Print PDF

தினமலர் 24.12.2009

திண்டுக்கல்லில் 46 ரோடுகள் சீரமைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில் உள்ள 46 ரோடுகள் சீரமைக்கப்பட உள்ளன. திண்டுக்கல்லில் பா தாள சாக்கடை பணி வரும் மார்ச்சுக்குள் முடிந்து விடும். பணிகள் முடிந்த பகுதியில் உள்ள 46 ரோடுகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. வரும் டிச., இறுதியில் 26 ரோடுகளுக்கும், ஜனவரியில் 20 ரோடுகளுக்கும் டெண்டர் விடப் பட்டு பணிகள் உடனுக்குடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 24 December 2009 09:46
 


Page 151 of 167