Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

குமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சிகளில் ரூ.17.57 கோடியில் சாலைப் பணிகள்

Print PDF

தினமணி 19.12.2009

குமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சிகளில் ரூ.17.57 கோடியில் சாலைப் பணிகள்

நாகர்கோவில், டிச.18: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் 109 சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.

கொட்டாரம் பேரூராட்சியில் இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 2582 பயனாளிகளுக்கு இலவச டிவிக்களை வழங்கி அமைச்சர் மேலும் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2.70 லட்சம் இலவச டிவிக்கள் ஏறத்தாழ ரூ.65 கோடி செலவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1.79 லட்சம் டிவிக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாரம் பேரூராட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 82 பணிகள் ரூ.2.55 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சி பகுதிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.17.57 கோடியில் 109 சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் கொட்டாரம் பேரூராட்சியில் புல்லார்குளம் சாலை, பொட்டல்குளம் குருசடி சாலை மேம்பாட்டு பணிகள் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அமைச்சர்.

விழாவில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எம். சோமு, தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் என். தாமரை பாரதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வார்டு உறுப்பினர் செல்வி, பேரூராட்சித் தலைவர்கள் பொன்னம்பெருமாள், அன்பு வாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் சி. யோபு வரவேற்றார். வட்டாட்சியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

 

மாநகராட்சி, நகராட்சிகளில் ரோடு மேம்படுத்த உத்தரவு

Print PDF

தினமலர் 11.12.2009

 

ரூ.8.2 கோடி மதிப்பில் தாராபுரத்தில் சாலைகள் விரிவுபடுத்தும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 10.12.2009

ரூ.8.2 கோடி மதிப்பில் தாராபுரத்தில் சாலைகள் விரிவுபடுத்தும் பணி தீவிரம்

தாராபுரம், டிச.9: தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகள் ரூ.8.2 கோடி மதிப்பில் அக்கலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெருமளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பல சாலைகள் குறுகலானதாக உள்ளதால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வந்தன. குறிப் பாக தாராபுரம்- உடுமலை சாலை, தாராபுரம்-பொள்ளாட்சி சாலைகள் மிக குறுகலானதாக இருந்து வந்தன. இச்சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தன. இதையடுத்து, தற்போது சாலை விரிவாக்கத்துக்காக மத்திய சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தாராபுரம்-உடுமலை பைபாஸ் சாலை முதல் பெரும்பள்ளம் வரை 9.8 கி.மீ தூரம் ரூ.5 கோடி மதிப்பிலும், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை முதல் சத்திரம் கிராமம் வரையிலான 7.2 கி.மீ தூரம் ரூ.3.2 கோடி மதிப்பி லும் அகலப்படுத்தப்படுகின்றன. தற்போது, நடைபெற்று வரும் இப்பணிகள் 10 தினங் களுக்குள் முடிவடையும். இதைத்தொடர்ந்து, தாராபுரம் நகர் பகுதிகளில் நெடுஞ்சா லைத் துறைக்கு உட்பட்ட சாலைகளும் விரைவில் அகலப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 153 of 167