Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 2.12.2009

சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி, டிச. 1: லாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சரும் இத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஷாஜகான் பார்வையிட்டார்.

பெத்துச்செட்டிப்பேட்டை பகுதியில் வள்ளலார் வீதி, பொன்னியம்மன் கோயில் விதி, வேல் கோயில் வீதி ஆகியவற்றில் சாலைப் பணிக்காக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருóந்து ரூ.15.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு சாலைகளை அகலப்படுத்தி வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அமைச்சர் பார்வையிட்டார். உழவர்கரை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், செயற்பொறியாளர் முருகசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

அருப்புக்கோட்டையில் ரூ.1 . 28 கோடியில் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி 30.11.2009

அருப்புக்கோட்டையில் ரூ.1 . 28 கோடியில் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் தகவல்

அருப்புக்கோட்டை நவ, 29: அருப்புக்கோட்டை பகுதியில் ரூ.1 கோடி 28 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைத்துப் பேசினார்.

அருப்புக்கோட்டை நாடார் மேல ரதவீதியிலிருந்து சிவன்கோயில் வரை ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணியை கைத்தறிதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது: நெடுஞ்சாலைதுறை மூலம் விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைவரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் சாலையும்,பாவடி தோப்பு முதல் எம்.எஸ்.கார்னர் வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் நகராட்சி மூலம் டெலிபோன் ரோடு ரூ.30 லட்ச மதிப்பீட்டி லும்,பெரிய,சின்ன பள்ளிவாசல் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும்,நேரு மைதானம் முதல் தட் சனாமூர்த்தி கோயில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும்,மலையரசன் கோயில் சாலையை ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன எனத் தெரிவித்தார். விழாவில் ஓன்றியச் சேர்மன் சுப்பாராஜ், நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் மணி, மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 50 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு தொடக்கம்

Print PDF

தினமணி 30.11.2009

ரூ. 50 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு தொடக்கம்

நாகர்கோவில், நவ.29: நாகர்கோவிலில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

÷நாகர்கோவிலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தன.

÷நகரின் முக்கிய பகுதிகளான கேப்ரோடு, மீனாட்சிபுரம், செட்டிகுளம், கோட்டார், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகள் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ளன.

÷இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கைவிடுத்து, போராட்டங்களையும் நடத்தியுள்ளன.

÷இதையடுத்து நகராட்சி சாலைகளை சீரமைக்க நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

÷நாகரகோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை செல்லும் சாலை சீரமைப்பு பணிகளை நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் சனிக்கிழமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

÷நகர்மன்ற உறுப்பினர் ராம்மோகன், காங்கிரஸ் பிரமுகர் கிளிட்டஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

÷நகராட்சியிலுள்ள 51 வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் சேதமடைந்துள்ள மழை நீர் ஓடைகளும், பிரதான சாலைகளும் சீரமைக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

 


Page 156 of 167