Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

நெல்லை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் சாலைப்பணிக்கு ரூ. 13.13 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 30.11.2009

நெல்லை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் சாலைப்பணிக்கு ரூ. 13.13 கோடி ஒதுக்கீடு

திருநெல்வேலி, நவ. 29: திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர்வடகரை, வீரவநல்லூர், களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட 33 பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள அரசு ரூ. 13.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இம்மாவட்டத்தில், சாம்பவர்வடகரை, மணிமுத்தாறு, கீழப்பாவூர், ராயகிரி, முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், புதூர், இலஞ்சி, மேலகரம், அச்சன்புதூர், சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, களக்காடு, நாரணம்மாள்புரம், கோபாலசமுத்திரம், சங்கர்நகர், மேலச்செவல், சிவகிரி, வாசுதேவநல்லூர், பண்பொழி, வடகரைகீழ்பிடாகை, திசையன்விளை, வடக்குவள்ளியூர், பணகுடி, குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம், பத்தமடை, திருக்குறுங்குடி மற்றும் திருவேங்கடம் ஆகிய 33 பேரூராட்சிப் பகுதிகளில் 83 சாலைப்பணிகளை நபார்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ள அரசு ரூ. 13.13 கோடி நிதிஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

மேலும், ராயகிரி பேரூராட்சியில் ரூ. 5.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டணக் கழிப்பறை கட்டவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இப்பணிகள் அனைத்தும் 2010 ஜனவரியில் தொடங்கி ஜூனில் நிறைவடையும்.

அதுபோல் பகுதி 2 திட்டத்தின்கீழ் வீரவநல்லூர் மற்றும் மூலக்கரைப்பட்டி பேரூராட்சிகளில் தலா ரூ. 20 லட்சம் செலவில் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

 

மறைமலை நகரில் ரூ.10 கோடியில் சிமென்ட் சாலைகள் மற்றும் மின் விளக்குகள்

Print PDF

தினமலர் 25.11.2009

 

சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி 23.11.2009

சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணி தொடக்கம்

கருங்கல், நவ. 22: கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சடயன்குழி சாலையில் கருந்தளம் அமைக்கும் பணியை கிள்ளியூர் எம்எல்ஏ ஜான்ஜேக்கப் தொடக்கிவைத்தார்.

கிள்ளியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சடயன்குழி பிடாரி குளம் சாலை நீண்ட காலமாக பராமரிப்பின்றி, போக்குவரத்துகு ஏற்றதாக இல்லாமல் இருந்தது.

எனவே, இச் சாலையைச் சீரமைக்கக் கோரி அப் பகுதி மக்கள் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்தில் பிடாரி குளம் சாலையில் கருந்தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, அப் பணியை அவர் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர் சத்தியதாஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி கவுன்சிலர் பால்ராஜ், முன்னாள் கவுன்சிலர் பரமானந்த ஞானதாஸ், தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 23 November 2009 06:50
 


Page 157 of 167