Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மழைக்கு சேதமடைந்த ஹைவேவிஸ் மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை:ஆட்சியர்

Print PDF

தினமணி 14.11.2009

மழைக்கு சேதமடைந்த ஹைவேவிஸ் மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை:ஆட்சியர்

தேனி, நவ.13: தேனி மாவட்டத்தில் மழைக்கு சேதமடைந்த மலைச் சாலையை ரூ.31 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பி.முத்துவீரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைக்கு வருசநாடு, மேகமலை, அகமலை, போடி-கொட்டகுடி மற்றும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் பலத்த சேதமடைந்துள்ளன.

இதில் அகமலை சாலை, ஹைவேவிஸ் பேரூராட்சி ஆகிய மலைக் கிராமப் பகுதிகளில் பாறைகள் உருண்டதில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமலை சாலையில் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைவேவிஸ் பேரூராட்சிப் பகுதிகளில் வென்னியாறு, மணலாறு, மேல்மணலாறு ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும், மகாராஜா மெட்டுக்குச் செல்லும் வழியில் மூன்று இடங்களிலும் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை, ஆட்சியர் பி. முத்துவீரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சேதமடைந்த மலைச்சாலையை சீரமைக்க ரூ.31 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகளை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள ஹைவேவிஸ் மலைச் சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து, இச்சாலையை சீரமைத்து ஹைவேவிஸ் பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ஆட்சியர். பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளர் ஜோதிமுருகன், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:28
 

700 கி.மீ. தூரத்திற்கு சாலையை மேம்படுத்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி 14.11.2009

700 கி.மீ. தூரத்திற்கு சாலையை மேம்படுத்த மாநகராட்சி முடிவு

மதுரை, நவ. 13: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் கோ. தேன்மொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை 700 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு 50 சதவீதம் அரசும், 50 சதவீதம் மாநகராட்சியும் செலவு செய்ய உள்ளது. இத்தொகை உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் இருந்து வட்டியில்லாக் கடனாகப் பெறப்பட உள்ளது. இதற்காகத் திட்ட அறிக்கை தயாரிக்க தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நகர் முழுவதும் சாலைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் சாலையை எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு, 9 மாதங்களில் அறிக்கை தயார் செய்யவுள்ளது.

மதுரை நகரில் பாதாளச் சாக்கடை, வைகை 2-வது குடிநீர்த் திட்டம், மின்வாரியம், டெலிபோன் கேபிள் பதித்தல் உள்ளிட்ட சாலையைத் தோண்டும் பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை அமைத்து முடித்தபிறகு எந்த ஒரு சேதமும் ஏற்படுத்தவிடாமல் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:17
 

30 பஸ் வழி சாலைகள் சீரமைப்பு

Print PDF

தினமணி 12.11.2009

30 பஸ் வழி சாலைகள் சீரமைப்பு

சென்னை, நவ.12: தொடர் மழை காரணமாக சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு சாலைகளில், 30 பஸ் வழிச் சாலைகள் வியாழக்கிழமை (நவ. 12) சீரமைக்கப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடர் மழைக்கு பல்வேறு சாலைகள் சேதமடைந்தன. இதில் 10 மண்டலங்களில் உள்ள 30 பஸ் வழிச் சாலைகள், 130 டன் தார் கலவை கொண்டு சரி செய்யப்பட்டன.

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, கோதண்டராமன் சாலை, மூர்த்திங்கர் தெரு, பி.பி. சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, காளியம்மன் கோயில் தெரு, டெய்லர்ஸ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மற்ற பஸ் வழிச் சாலைகளும், உட்புறச் சாலைகளும் சீரமைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Last Updated on Friday, 13 November 2009 09:44
 


Page 159 of 167