Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தமிழகத்தில் ரூ.258 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: ஜெயலலிதா உத்தரவு

Print PDF

மாலை மலர்          03.07.2013

தமிழகத்தில் ரூ.258 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில் ரூ.258 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சாலைகள் அனைத்து மக்களையும் இணைத்து தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. மாநிலத்தில் உள்ள கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன.

கிராமங்களையும் நகரங்களையும் இணைப்பது, பயண நேரம், வாகன இயக்கச் செலவு ஆகியவற்றை குறைப்பது போன்ற நோக்கங்களுடன், ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பினை ஏற்படுத்தி, தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சென்னை திருச்சி திண்டுக்கல் சாலையில், திருச்சி மாநகரத்திற்கும் ஸ்ரீரங்கத் திற்கும் இணைப்பாக 1927-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனப் போக்குவரத்து இப்பாலத்தில் தற்பொழுது அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக. திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் சென்றடைவதிலும், ஸ்ரீரங் கத்திலிருந்து திருச்சி சென்றடைவதிலும் காலதாமதம் ஏற்படுகின்றது. இதன் தெடர்ச்சியாக, ஏனைய பகுதிகளில் வாகன நெரிசல் அதிக அளவு ஏற்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பழுந்தடைந்துள்ள இரும்புப் பாலத்தினை மாற்றியமைத்து புதியதாக நான்கு வழி பாலம், அணுகு சாலையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே ஒரு சிறு பாலம் மற்றும் சாலை சந்திப்பில் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றை 81 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கோடைவாசஸ்தலமாக விளங்கும் கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கொடைக்கானலில் 17 கி.மீ நீள சாலைத் தொடர்களை இடை வழித் தடத்திலிருந்து இரு வழித்தடமாக அகலப்படுத்து தல், சிறு பாலங்கள் கட்டுதல், சாலையை ஒட்டி தாங்கும் சுவர் கட்டுதல் போன்ற பணிகளை 18 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் நகரை எளிதில் அடைவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ள விக்கிரவாண்டி- கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில், காவேரி ஆற்றின் குறுக்கே பாலக்கரையில் அமைந்துள்ள பாலம் பழுதடைந்துள்ளதால், இப்பாலத்தில் தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலம் வழியாக சுற்றி விடப்படுகிறது. இதனால் காலவிரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. எனவே இந்த பாலத்தினை 5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து மீண்டும் கட்டுவ தற்கான நிர்வாக ஒப்பு தலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உத்தர விட்டுள்ளார்.

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் களைத் தவிர்க்கும் வகையில் சேலம் நகரிலுள்ள ஐந்து ரோடு சாலை சந்திப்பு மற்றும் குரங்குச் சாவடி சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ள முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இச்சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் சுண்ணாம்பு சுரங்கம் மற்றும் சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களாகும். இத்தொழிற் சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்க ளால், இங்குள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளன.

எனவே பழுதடைந்த சாலைகள் அனைத்தும் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள பழுதடைந்துள்ள 42 கி.மீ நீளமுள்ள சாலைகளை 86 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள 36.80 கி.மீ சாலைகளை 65 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவிலும் சீரமைத்திட, அதாவது மொத்தம் 152 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் 78.80 கி.மீ நீளமுள்ள சாலைகளை சீரமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். அரசின் இந்த நடவடிக்கைகள், வாகன நெரிசல் இன்றி குறைந்த நேரத்தில், பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடத்தைச் சென்றடைய வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 July 2013 11:49
 

சாலைப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி             02.07.2013

சாலைப் பணி தொடக்கம்

அரவக்குறிச்சி பேரூராட்சியில் ரூ. 37 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி கரடிப்பட்டியில் இருந்து ராஜபுரம் சாலை வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 37 லட்சத்தில் 1.6 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை அமைக்கும் பணியை  பேரூராட்சித் தலைவர் என். மணிகண்டன் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தொகுதிச் செயலர் எஸ்.பி. லோகநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் எஸ். சிவசெல்வி, பேரூராட்சி உறுப்பினர்கள் எம்ஜிஆர் மனோகரன், செந்தில், ஜோதி, கிளைச் செயலர்கள் நீலகண்டன், கோவிந்தசாமி, ரங்கராஜ் மற்றும் ஊர் நாயக்கர் முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கோவை அருகே ரூ.6 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை

Print PDF

தினத்தந்தி             30.06.2013

கோவை அருகே ரூ.6 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை

கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் 17–வது வார்டு பீக்காக் அவென்யூவில் தன்னிறைவு திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2.6 லட்சம் மொத்தம் ரூ.6.18 லட்சத்தில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையுடன் தொடக்க விழா பேரூராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சிவசாமி, பொறியாளர்கள் மனோகரன், ராஜேந்திரன் துணைத்தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் சித்ராவிஜயன், நகர்நிர்வாகிகள் குணசேகரன், புருஷோத்தமன் ராமன், பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 


Page 24 of 167