Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

மாநகராட்சி சார்பில் ரூ.95 லட்சத்தில் புதிதாக மின்விளக்குகள்

Print PDF
தினமணி       26.05.2013

மாநகராட்சி சார்பில் ரூ.95 லட்சத்தில் புதிதாக மின்விளக்குகள்


மதுரை மாநகராட்சி கே.கே. நகர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் இருந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரை ரூ. 95 லட்சம் செலவில், புதிதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கே.கே.நகர் முதல் உயர் நீதிமன்ற கிளை வரை ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு

மொத்தம் 200 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 46 மின்கம்பங்களில் தலா 2 மின்விளக்குகளும், 154 மின்கம்பங்களில் தலா ஒரு மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால் ஆகியோர் புதிய மின்விளக்குகளை துவக்கி வைத்தனர்.

மேலும், மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூக்கடைகளுக்கு மேற்கூரை மற்றும் தளம் அமைக்கும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதில், உயர் நீதிமன்றப் பதிவாளர் உதயன், மாநகராட்சி நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ. மதுரம், மண்டலத் தலைவர் ஜெயவேல், செயற் பொறியாளர்கள் சாந்தாராம், திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தார்சாலை அமைக்கும் பணி

Print PDF
தினகரன்        08.05.2013

தார்சாலை அமைக்கும் பணி


சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் நகராட்சியில் சருகுமாரியம்மன் கோயில் முதல் குள்ளங்கரடு வரை தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தார்சாலை அமைப்பதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.60 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். தார்சாலை அமைக்கும் பணியை சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, பொறியாளர் கணேசன், முன்னாள் நகராட்சித்தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4½ கோடி செலவில் பிளாஸ்டிக் தார்சாலை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி          08.05.2013

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4½ கோடி செலவில் பிளாஸ்டிக் தார்சாலை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்


சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 24 இடங்களில் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் செலவில் பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை மேயர் சவுண்டப்பன் தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் தார்சாலை

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 1,2,3,18,19,24 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் 24 இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2012–13–ன் கீழ் ரூ.4 கோடியே 7 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை 7.726 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

இந்த தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று சூரமங்கலம் டாக்டர்ஸ் காலனியில் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

24 இடங்களில்

இதைத்தொடர்ந்து சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஈ.பி. காலனி, ராசிநகர், பாவாயாம்மாள் நகர், கண்ணகி தெரு, நேரு தெரு, கம்பர் தெரு, வசந்தம் தெரு உள்பட 24 இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன், செயற்பொறியாளர்கள் அசோகன், காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் தியாகராஜன், மாதேஸ்வரன் உளபட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 26 of 167