Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை

Print PDF
தினத்தந்தி        16.04.2013

கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தார் சாலை

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளைம் பேரூராட்சியில் நகர்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் செலவில் கருங்காளிவலசு காலனியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் இந்துமதி தங்கவேல் நேற்று ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிச்சாமி, வார்டு உறுப்பினர் மனோகரன் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் உடன் சென்றனர்.
 

சித்திரை திருவிழா வீதிகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை

Print PDF
தினமலர்        09.04.2013

சித்திரை திருவிழா வீதிகளை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை


தேனி:வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா வீதிகளை, சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேனி அல்லிநகரத்தில் வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா முதல் தேதி கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை விழா நடக்கிறது. விழாவை ஒட்டி, அல்லிநகரத்தில் இருந்து சாமி புறப்பட்டு, காவடி ஊர்வலத்துடன், முக்கிய வீதிகளை சுற்றி வீரப்ப அய்யனார் கோயிலை சென்றடையும். தற்போது இந்த வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் சாமி ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படும்.ரோடுகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். உடனடியாக சீரமைக்க வேண்டும், இப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் ,என இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மனு கொடுத்திருந்தார் இதனை தொடர்ந்து தேனி நகராட்சி தலைவர் முருகேசன், கமிஷனர் ராஜாராம், துணைத்தலைவர் காசிமாயன், அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர்கள் வீரமணி, சுந்தரபாண்டியன், சண்முகசுந்தரம் உட்பட பலர் வீதிகளை சுற்றிப்பார்த்தனர். இந்த ரோடுகள் உடனடியாக சீரமைக்கப்படும், என தலைவர் முருகேசன் மக்களிடம் உறுதியளித்தார்.
 

சாலை விரிவாக்கத்தால் சென்னைவாசிகளுக்கு பயன்

Print PDF
தினகரன்                    06.04.2013

சாலை விரிவாக்கத்தால் சென்னைவாசிகளுக்கு பயன்


உள்கட்டமைப்பு வசதிகள் பெருகினால் தான் ஒரு நகரம் வளர்ச்சி அடைய முடியும். கட்டமைப்பு வசதிகள் ஒரு நகரின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு போன்றது. அவை சீராக வளர்ச்சி அடைந்தால் சமூகமும், பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விமான நிலைய நவீனமயமாக்கல், மெட்ரோ ரயில், முக்கிய சாலைகள் விரிவாக்கம், புதிய பாலங்கள் என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிக வாகனங்கள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்தது. தற்போது அந்த சாலையில் உள்ள அனுமதியில்லாத வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. அந்த பகுதியில் நகருக்கு வெளியே குடியிருப்பவர்கள் இதனால் பெரிதும் பயனடைந்துள்ளனர். மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளை ஓஎம்ஆர் சாலையுடன் இணைக்கும் சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக ஓஎம்ஆர் சாலையை ஒட்டிய பகுதிகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த பலனை வழங்கி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை சுற்று வட்டாரப் பகுதிகள் நிலம், வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இந்த சாலைகளில் போக்குவரத்தை சுலபமானதாக ஆக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது. மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கினால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Page 29 of 167