Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'ஒரு ஜோடி ஷூ ; 2 ஜோடி சாக்ஸ்'

Print PDF

தினமலர்       20.05.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'ஒரு ஜோடி ஷூ ; 2 ஜோடி சாக்ஸ்'

கோவை : கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 9,628 மாணவர்களுக்கு, 'ஒரு ஜோடி ஷூ; இரண்டு ஜோடி சாக்ஸ்' வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் முயன்று வருகின்றன. தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கு இணையாக செயல்வழி கற்றல், ஆங்கில பேச்சு பயிற்சி வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. தனியார் பள்ளிகளை போலவே, மாநகராட்சி பள்ளி குழந்தைகளும் தரமான சீருடைகளையும், காலணிகளை அணிந்து வர மாநகராட்சி கல்விக்குழு முடிவு செய்தது. குழந்தைகளுக்கு இவற்றை மாநகராட்சி செலவில் வழங்க அனுமதி கோரியிருந்தது.

இது தொடர்பான மாநகராட்சி தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு,நிதியை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்திக்கொள்ளவும் ஒப்புதல் ளித்துள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கு துறை முதன்மை செயலர் நிரஞ்சன்மார்டி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆரம்ப பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் 9,628 குழந்தைகளுக்கு, 'ஒரு ஜோடி ஷூ; இரண்டு ஜோடி சாக்ஸ்' வழங்க 19.25 லட்ச ரூபாய் செலவாகும். மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் இவை கிடைக்கும்.