Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு பள்ளிகளில் முதல் 4 இடம் பிடித்து கிட்டப்பா நகராட்சி பள்ளி சாதனை

Print PDF

தினகரன்   20.05.2010

அரசு பள்ளிகளில் முதல் 4 இடம் பிடித்து கிட்டப்பா நகராட்சி பள்ளி சாதனை

மயிலாடுதுறை, மே 20: மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு மற்றும் நகராட்சி மேனிலைப்பள்ளிகளில் முதல் நான்கு இடங்களையும் பெற்று கூரைநாடு கிட்டப்பா நகராட்சி மேனிலைப்பள்ளி பெற்று சாதனை படைத்துள்ளது.

மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேனிலைப்பள்ளி மாணவி தையல்நாயகி 1,124 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். விஜயராகவன் 1,090 மதிப்பெண்களை பெற்று இரண்டாமிடத்தையும், பிருதிவிகுமார் 1,076 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடத்தையும், ரம்ய ரேவதி 1,071 மதிப்பெண்களை பெற்று நான்காம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

1,124 மதிப்பெண்கள் பெற்ற தையல்நாயகி நாகை வருவாய் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார். தையல்நாயகி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாநிலத்தில் முதல் இடத்தை பெற்று துணை முதல்வர் ஸ்டாலினால் பாராட்டும் பரிசும் பெற்றவர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் மாணவிகளையும் அவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் முருகதாஸ், உதவி தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன், விசாலம், பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டினர்.