Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது நகராட்சி பள்ளிகளை சீரமைக்க வேண்டும்

Print PDF

தினகரன் 01.06.2010

மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது நகராட்சி பள்ளிகளை சீரமைக்க வேண்டும்

பொள்ளாச்சி, ஜூன் 1: பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.

நகரமைப்பு அலுவலர் வரதராஜன் முன்னிலை வகித்தார். இதில் நடைபெற்ற கவுன்சிலர்களின் விவாதம்:

கவுன்சிலர் மெக்சன் மணி (காங்.,): நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதே சமயம் நகரில் அவல நிலையில் உள்ள பிற நகராட்சி பள்ளிகளையும் சீரமைக்க முன்வர வேண்டும். பல மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணி க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி தவறு செய்த அனைவர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சியின் சுகாதார பிரிவினர் வியாபாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு கண்துடைப்புக்காக ரெய்டு நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியதும் பல்வேறு கட்சி கவுன்சிலர்களும் எழுந்து நகராட்சியின் எந்த பிரிவாக இருந்தாலும் சிறிய பணிக்கு கூட லஞ்சம் கொடுத்தாக வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்று ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டினர்.

கடந்த 20 நாட்களுக்கு பிறகு கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கிறது என்பதற்காக இன்று (நேற்று) காலைதான் சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட்டன. சுகாதார பிரிவினர் எந்த பணிகளையும் முழுமையாக செய்வதில்லை.

இவ்வாறு பல்வேறு விவாதங்களுக்கு பிறகு சாதாரண கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடர்பாக 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்