Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

40 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி

Print PDF

தினமலர் 21.07.2010

40 பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி

கோவை, ஜூலை 21: கோவை மாநகராட்சியில், 40 பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மேஜை, நாற்காலி பெறப்பட்டது.

கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டில் 45 ஆரம்ப பள்ளி உட்பட 85 பள்ளி செயல்படுகிறது. இதில் ஆரம்ப பள்ளி தவிர, 40 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் செலவில் மேஜை, நாற்காலி வாங்கப்பட்டது. அரசு நிறுவனமான டான்சியிலிருந்து நான்கு பேர் அமரும் வகையில், இரட்டை மேஜை நாற்காலி 449 760 வாங்கப்பட்டது. இது தவிர, ஆசிரியர்களுக்கு 449 மேஜை, 460 நாற்காலி பெறப்பட்டது. பள்ளியில் பொதுமக்கள் உட்கார வசதியாக 170 நாற்காலி (மூன்று பேர் அமரும் வகையில்) பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேஜை, நாற்காலிகளை கோவை மாநகராட்சி கல்வி, பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், மீனா, விஜயலட்சுமி, சிவகாமி உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். மேஜை, நாற்காலி தரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி கல்வி மற்றும் பூங்கா குழுவினர், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 65, 67, 68, 64, 17, 72 வார்டுகளில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை தரமாக நடத்தவேண்டும், அனைத்து பூங்காக்களிலும் நிழல் தரும் மரங்களை அதிகமாக நடவேண்டும், மூலிகை தாவரங்களை அதிகளவு நட்டு வளர்க்கவேண்டும். பூங்காக்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்யவேண்டும் என அதிகாரிகளை கல்வி குழு தலைவர் கல்யாணசுந்தரம் கேட்டு கொண்டார்.