Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்

Print PDF

தினமலர் 10.08.2010

நகராட்சி நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு தரம் உயர்த் தப்படும் என்று சேர்மன் ஜனகராஜ் பேசினார்.மாவட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான துளிர் வினாடி-வினா போட்டி நேற்று விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலைப் பள் ளியில் நடந்த நிகழ்ச் சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளா ளர் சிவமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன் வரவேற்றார்.விழுப்புரம் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ் துளிர் வினாடி-வினா போட் டியை துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி கல்வி வளர்ச் சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். விழுப்புரம் மாவட்டத் திற்கு மருத்துவக் கல்லூரி, இரு இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு அரசு கல்லூரியும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வித் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக் கான மாணவர்கள் உயர் கல்வியும், தொழிற் கல்வியும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தியிருப்பது கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள் ளது. அதேபோல் வருங்காலத்தில் மருத்துவக் கல்வியும் தமிழில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையாக நகராட்சி பள்ளி தரம் உயர்த் தப்படும். இந்த பள்ளிக்கு தேவையான கட்டட வசதி, ஆய்வக வசதி மற் றும் கம்ப்யூட்டர் வாங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் மூன்று மாதங்களில் நகராட்சி பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப் பட்டு மாநில அளவில் சிறந்த பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் பேசினார்.நகராட்சி பணி மேற் பார்வையாளர் ஜெயபிர காஷ் நாராயணன், தமிழ் நாடு அறிவியல் இயக்க நிர்வாகி மோகன் கலந்து கொண் டனர். அறிவியல் இயக்க மாநில பொதுக் குழு உறுப்பினர் அய் யனார் நன்றி கூறினார்.