Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாந​க​ராட்சி பள்ளி மாண​வர்​க​ளுக்கு இல​வச கான்​வாஸ் ஷூ வழங்க திட்​டம்

Print PDF

தினமணி 11.08.2010

மாந​க​ராட்சி பள்ளி மாண​வர்​க​ளுக்கு இல​வச கான்​வாஸ் ஷூ வழங்க திட்​டம்

கோவை,​​ ஆக.​ 10: கோவை மாந​க​ராட்​சி​யில் துவக்​கப் பள்ளி மாணவ மாண​வி​க​ளுக்கு இல​வச கான்​வாஸ் ஷூ வழங்​கத் திட்​ட​மி​டப்​பட்​டுள்​ளது.​ இதற்​கான மாதி​ரி​களை கல்​விக் குழு​வி​னர் செவ்​வாய்க்​கி​ழமை ஆய்வு செய்​த​னர்.​

இக் குழு​வின் கூட்​டம்,​​ குழுத் தலை​வர் ஆர்.கல்​யா​ண​சுந்​த​ரம் தலை​மை​யில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ கல்​வி​அ​லு​வ​லர் ​(பொ)​ சோம​சுந்​தரி முன்​னிலை வகித்​தார்.​ இக் கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடி​வு​கள்:​

மா​ந​க​ராட்சி ஆரம்​பப் பள்ளி மற்​றும் நடு​நி​லைப் பள்​ளி​க​ளில் செயல்​வ​ழிக் கற்​றல் வகுப்​பு​கள் நடக்​கும்​போது மாணவ மாண​வி​கள் அமர்ந்து படிக்​கும் வகை​யில் 1,170 வட்ட மேஜை​கள்,​​ 7 ,​322 பிளாஸ்​டிக் இருக்​கை​கள் வாங்க வேண்​டும்.​

1 முதல் 5 வகுப்பு வரை பயி​லும் 9,628 மாணவ மாண​வி​க​ளுக்கு ஒரு ஜோடி கான்​வாஸ் ஷூ |​ 19 லட்​சத்து 25 ஆயி​ரம் மதிப்​பில் வாங்க,​​ அனு​மதி வழங்​கப்​பட்​டது.​ இதற்​கான மாதி​ரியை கல்​விக்​கு​ழு​வி​னர் ஆய்வு செய்​த​னர்.​

மா​ந​க​ராட்சி பகு​தி​யில் அமைக்​கப்​பட்ட அனைத்து பூங்​காக்​க​ளி​லும் அதிக எண்​ணிக்​கை​யில் மூலிகை செடி​கள் நட வேண்​டும்.​ மாந​க​ராட்சி மைதா​னங்​களை வர்த்​தக நோக்​கில் பயன்​ப​டுத்​தக் கூடாது என்று இக் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.​ ​ ​ ​ ​ கூட்​டத்​தில் உதவி நிர்​வா​கப் பொறி​யா​ளர் கருப்​ப​சாமி,​​ ..சி.​ பூங்கா இயக்​கு​நர் பெரு​மாள்​சாமி ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.