Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி பெற 3600 தரை விரிப்பு

Print PDF

தினகரன் 13.08.2010

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி பெற 3600 தரை விரிப்பு

கோவை, ஆக. 13: மாநகராட்சி பள்ளிகளில் யோகா பயிற்சி பெற தரை விரிப்பு நேற்று பெறப்பட்டது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 87 பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த, மன வலிமை, ஞாபக திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை, கவனி ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத் தில் யோக, தியான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அனைத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் யோகா பயிற்சி தரப்பட்டது.

இந்த பயிற்சி பெற்ற, ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு யோக பயிற்சி தரப்படுகிறது. ஆனால் மா ணவ மாணவிகள் வெறும் தரையில் பயிற்சி பெற முடியாமல் தவித்து வந்தனர். மாணவ மாணவிகளின் வசதிக்காக 5.58 லட்ச ரூபாய் செல வில் 3600 தரை விரிப்புகள் நேற்று பெறப்பட்டது.

மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கோ ஆப் டெக்ஸ் மூலம் இந்த தரை விரிப்புகள் வாங்கப்பட்டது. 45 மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளுக்கு 1125 தரை விரிப்பும், 13 நடுநிலைப்பள்ளிகளுக்கு 325 தரை விரிப்பும், 16 மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1600 தரை விரிப்பும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவிகள் யோக பயிற்சி பெற முடியும். யோகா பயிற்சியின் மூலம் மாணவ மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தி, 100 சதவீத ரேங்க் பெறும் பள்ளிகளாக மாற்றும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரை விரிப்புகளை மாநகராட்சி கல்வி குழு தலைவர் கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.