Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாழ்க்கை வழிகாட்டி மையம்

Print PDF

தினகரன் 16.08.2010

மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வாழ்க்கை வழிகாட்டி மையம்

கோவை,ஆக.16:கோவை அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் உயர்படிப்பகம் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள் ளது. 1600 சதுர அடியில் ரூ.20 லட்சம் செலவில் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள இம் மையத்தின் தரை தளத்தில் இணைய தள வசதியுடன் கணினி மையமும், நூலகமும் இடம் பெற்றுள் ளன. நூலகத்தில் உயர் கல்வி, சிவில் சர்வீஸ் மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள் ளன. முதல் தளத்தில் புரொஜக்டருன் பயிற்சி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தை மேயர் வெங்கடாசலம் திறந்து வைத்தார். மாநகராட்சி கமிஷ னர் அன்சுல் மிஸ்ரா முன் னிலை வகித்தார். விழாவில், மாநகராட்சி மண் டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் கலந்து கொண்ட னர்.