Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

Print PDF

தினகரன் 02.09.2010

மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள்

சென்னை, செப்.2: மாநகராட்சி நடத்தும் சமுதாய கல்லூரிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் ஏழுகிணறு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஆழ்வார்ப்பேட்டை ஆகிய 4 இடங்களில் சமுதாய கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இந்த சமுதாய கல்லூரிகளில் கணினி நுட்பவியல், செவிலியர் உதவியாளர், ரொட்டி தயாரித்தல், பி.பி.., டெய்லரிங், எலக்ட்ரீஷியன், செல்போன் ரிப்பேர் செய்தல், கஸ்டமர் சர்வீஸ் அண்டு சேல்ஸ், ஆஸ்பிட்டாலிட்டி சர்வீஸ் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர் கல்வி பெற இயலாத சூழ்நிலையில் உள்ளவர்கள், பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தொழிலில் குறுகிய கால பயிற்சி இந்த சமுதாய கல்லூரிகள் மூலம் அளிக்கப்படுகிறது. இப்படி பயிற்சி பெறுபவர்களுக்கு பெரிய நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தரப்படுகிறது.

மேலும் மூன்று இடங்களில் சமுதாய கல்லூரிகள் விரிவு படுத்தப்படவுள்ளது. எனவே, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரவும் 7 சமுதாய கல்லூரிகளை ஒருங்கிணைப்பதற்கும் வடசென்னை, தென்சென்னைக்கு தலா ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.