Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 24.09.2010

மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் எட்டு, உயர் நிலைப்பள்ளிகள் மூன்று ஆக 11 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்கள் வேண்டும் என்று பள்ளிகளில் இருந்து மாநகராட்சிக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டது.

கடிதங்களை பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு 20 லேப்-டாப், 130 கம்ப்யூட்டர், ஐந்து பிரிண்டர், 130 சேர், டேபிள், எட்டு யுபிஎஸ், நான்கு ஜெராக்ஸ் மிஷின், ஒரு குளிர்சாதனப்பெட்டி, 10 எல்.சி.டி., புரொஜக்டர், ஐந்து டிஜிட்டல் கேமரா, ஐந்து எம்.எம்., மைக், ஒரு ஆம்பளிபையர், 18 இன்ஸ்ட்ரெக்டர் ஒயிட் போர்டு ஆகியவற்றை வழங்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.