Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பணிகளில் ரூ6 ஆயிரம் கோடி மோசடி தணிக்கை குழு அறிக்கையில் தகவல்

Print PDF

தினகரன் 08.10.2010

மாநகராட்சி பணிகளில் ரூ6 ஆயிரம் கோடி மோசடி தணிக்கை குழு அறிக்கையில் தகவல்

பெங்களூர், அக்.8: பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளில் ரூ6ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சி பணிகளில் ஊழல் நடந்து வருவதாக அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களில் ரூ6ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களில் விதிமுறைகள் 2008 முதல் 2010 ஆண்டுகளில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 2008&09ம் ஆண்டுக்காக ரூ1,141கோடிக்கு திட்டப்பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை செய்துமுடிக்க ரூ1,500கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த ஆண்டிலும் ரூ2ஆயிரத்து438 கோடிக்கான நலப் பணிகளில் ரூ2ஆயிரத்து 500கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிகரிக்கப்பட்டுள்ள தொகைக்கு கமிஷனரின் ஒப்புதல் பெறவேண்டியது கட்டாயம். ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே ஒப்புதல் அளித்துள்ளனர். பல பணிகளுக்கான டெண்டர்கள் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் வெளியூரிலுள்ள பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், உள்ளூர் பத்திரிகைகளில் இடம்பெறவில்லை. ஒரு சில காண்டிராக்டர்களின் நலனை விருப்பத்தில் கொண்டு இதுபோன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பல திட்டங்களில் அவை நகரின் எந்தப்பகுதியில் எந்த வார்டில் செய்யப்பட்டன என்ற விவரமே குறிப் பிடப்படவில்லை. ஆனால், பொதுவாக மெட்ரோ ரயில்பணி நடைபெறும் இடங்களைச் சுற்றிலும் சாலை மேம்பாடு, கால்வாய் அமைக்கப்பட்டது என்ற பொதுவான குறிப்பு மட்டுமே இடமபெற்றுள்ளது.

ஒரு பணியை செய்துமுடிக்கு முன்னர் அவற்றை எப்படிசெய்யவுள்ளோம் என்பது குறித்த திட்டக்குறிப்பு இடம்பெற வேண்டியது அவசியம். ஆனால், கடந்த 3ஆண்டுகளில் மாநகராட்சியில் நடைபெற்ற பணிகள் எதற்கும் இதுபோன்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. 2009&10ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தயாரிப்பதற்காக மாநகராட்சியிடமிருந்து கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கமிஷனர் 84 இன்ஜி னியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.