Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

Print PDF

தினமணி 08.10.2010

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

கோவை,​​ அக்.​ 7: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

​ கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் செலவில் உயர்கல்வி மையம் ஆகஸ்ட் ​ மாதம் அமைக்கப்பட்டது.​ மாநகராட்சி பள்ளி மாணவ,​​ மாணவியருக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க கோவை அரசு கலைக் கல்லூரி குடிமைப்பணி ​ பயிற்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

​ இதன்படி மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.​ முதல் பயிற்சி முகாம் செப்.​ 29ம் தேதி நடந்தது.​ இதில் மாநகர காவல் ஆணையர் சைலேந்திபாபு பங்கேற்றார்.​ இரண்டாம் நிகழ்வு வரும் சனிக்கிழமை(அக்.9) நடக்கிறது.​

இனி வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 100 மாணவர்கள் வீதம் சிறப்புப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ முதல் கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கும்,​​ அடுத்த கட்டமாக பிளஸ் 1 மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

​ மேல்நிலை படிப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புகள்,​​ ​ஆர்வமுள்ள துறைகளைக் கண்டறிதல்,​​ அதற்கான படிப்புகளை தெரிவு செய்தல்,​​ அந்த ​ படிப்புகள் உள்ள கல்வி நிறுவனங்கள்,சேர்க்கை விதிமுறைகள்,​​ உள்ளிட்டவை கற்றுத்தரப்பட உள்ளது.​ படிப்பிற்கான வேலை வாய்ப்பு உள்ள துறைகள்,​​ அதற்கானபோட்டித் தேர்வுகள்,​​ போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறைகள் ​கற்றுத்தரப்படுகிறது.​ எளிதில் வேலை வாய்ப்பு பெறத் தேவையான மென்திறன் ​பயிற்சிகள்,​​ உரையாடும் திறன்,​​ சூழ்நிலையை திறம்பட கையாளுதல்,​​ குழு செயல்பாடு,​​ பொது அறிவு,தமிழ் ​ மற்றும் ஆங்கில மொழிகளை சிறப்பாகக் ​ கையாளும் திறன் கற்றுத்தரப்பட உள்ளது.​​ இது தவிர,​​ அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான சுத்தம்,சுகாதாரம் ​ பேணுதல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,​​ பிளாஸ்டிக் ஒழிப்பு,போக்குவரத்து விதிகளை ​ அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.​ ​

​ கல்வியாளர்கள்,​​ துறை ​ நிபுணர்கள்,​​ அரசு அதிகாரிகள்,சாதனையாளர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன.​ உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறிப்புகள் அடங்கிய வழிகாட்டி கையேடு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.​

இது தவிர மாநகராட்சி உயர்கல்வி மையத்தின் மூலம் ​பொருளாதாரத்தில் பின்தங்கிய 120 மாணவ,​​ மாணவியர் இலவச சிவில் சர்வீசஸ் ​பயிற்சி பெற்று வருகின்றனர்.​ ​ ​ ​ மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் உயர்கல்வி மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிபுணர் பி.கனகராஜ்,​​ மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிவருகிறார்.