Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கட்டடம்: செம்மலை எம்.பி.​ திறந்து வைத்தார்

Print PDF

தினமணி 08.10.2010

மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 8 லட்சத்தில் கட்டடம்: செம்மலை எம்.பி.​ திறந்து வைத்தார்

சேலம்,​​ அக்.​ 7: ​ ​ சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை சேலம் எம்.பி.​ எஸ்.செம்மலை திறந்து வைத்தார்.

சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாதகாப்பட்டி மேட்டுத் தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ. 8 லட்சம் நிதியை செம்மலை ஒதுக்கியிருந்தார்.​ கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக பகுதிச் செயலர் சண்முகம் தலைமை தாங்கினார்.​ மாநகர் மாவட்டச் செயலர் எம்.கே.செல்வராஜ்,​​ முன்னாள் எம்.எல்..​ எஸ்..​ வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​ புதிய வகுப்பறைகளை செம்மலை எம்.பி.​ திறந்து வைத்துப் பேசினார்.​ நிகழ்ச்சியில் அவர் கூறும்போது,​​ சேலம் மாநகர்,​​ மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள்,​​ ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள்,​​ ஆழ்துளை கிணறுகள்,​​ சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.​ மேலும் பல லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். ​ முன்னாள் எம்.எல்.ஏ.​ நடேசன்,​​ முன்னாள் துணை மேயர் செüண்டப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.