Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சி பள்ளியில் 186 மாணவருக்கு இலவச சைக்கிள்

Print PDF

தினகரன் 13.10.2010

கரூர் நகராட்சி பள்ளியில் 186 மாணவருக்கு இலவச சைக்கிள்

கரூர், அக்.13: கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ் வரி, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி ஆகியோர் சைக்கிள் வழங்கினர்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் பல் வேறு திட்டப் பணிகளின் மூலம் மக்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கல்விக்காக அரசு பல திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் மோட்டார் சைக்கிளில் சென்றாலும், சைக்கிளில் செல்வது உடல் நலத்திற்கு நல்லது. 80 ஆண்டுகள் பழமையான சைக்கிள் எங்களது வீட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. என்றார்.

186 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6லட்சத்து 32ஆயிரத்து 400. விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரபு, தலைமை வகித்தார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் நன்னியூர் ராஜேந்திரன், கைத்தறி ஆலோசனைக்குழு உறுப்பினர் பரமத்தி சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, முதன்மைக்கல்வி அலுவலர் கந்தசாமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, கரூர் நகர்மன்ற துணைத்தலைவர் கனகராஜ், அரசு பாவேந்தர் விருது பெற்ற கவிஞர் கன்னல், வாழ்த்தி பேசினர். தலைமையாசிரியர் குமாரசாமி வரவேற்று பேசினார்.

உதவி தலைமையாசிரியர் சிவராஜ் நன்றி கூறினார் தாந்தோணி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரகுநாதன், தாசில்தார் தர்மராஜ், பசுவை சக்திவேல், பாலாஜி, கவுன்சிலர் ராஜலிங்கம், பெற்றோர், ஆசிரியர் கலந்து கொண்டனர்.