Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர மாணவர்கள் கடும் போட்டி

Print PDF

தினகரன்                  16.11.2010

மாநகராட்சி நடத்தும் சென்னை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர மாணவர்கள் கடும் போட்டி

சென்னை, நவ.16: மேலும் 40 சென்னை பள்ளிகளில் ஆங்கில கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேர மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மாநகராட்சி சார்பில் சென்னை பள்ளிகள் என்ற பெயரில், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 285 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 1 லட்சத்து 105 மாணவ&மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், ஷூ, ஆங்கில அகராதி போன்றவை வழங்கப்படுகின்றன.

மேலும் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, இப்பள்ளிகளின் தரம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 85 சதவீதமும், 12ம் வகுப்பில் 86 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் படிக்க மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சியில் 29 பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டது. இதில், 2, 2,07 மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது கூடுதலாக தரமணி, சைதாப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஈக்காட்டு தாங்கல், மயிலாப்பூர் உட்பட 40 சென்னை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த விஜயதசமியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:& மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10ம், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மேற்கல்வி வகுப்பை தொடர உதவி தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது, மாநகராட்சியில் ஆங்கில வழிக்கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு அதிக தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் ஏராளமான மாணவர்கள் சேருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.