Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை

Print PDF

தினகரன்            24.11.2010

ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, நவ. 24: அரசிடம் இருந்து குறைந்த விலையில் நிலத்தை பெற்று இயங்கி வரும் ஆரம்ப பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மாநகராட்சி, ஆரம்ப பள்ளி கல்வியை நிர்வகித்து வருகிறது. மாநகராட்சியின் கீழ் 1,746 ஆரம்ப பள்ளிகள் இயங்கி வருகின்றன.

சில தனியார் ஆரம்ப பள்ளிகள் அரசிடம் மிக குறைந்த விலையில் நிலத்தை பெற்று இயங்கி வருகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மாணவர் களுக்கு 20 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால், பல பள்ளிகள் இந்த விதியை செயல்படுத்தாமல் உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மஹேந்தர் நாக்பால் கூறியதாவது:

ஆரம்ப கல்வியை வளர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக சதுர அடி ஒரு ரூபாய் என்ற மிகக்குறைந்த விலையில் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் தனியாருக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 19 பள்ளிகள் வரை இந்த இடஒதுக்கீ ட்டை அமல்படுத்தாமல் உள்ளன என்று தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சில பள்ளிகள் மாநகராட்சி அதிகாரிகளையும் உள்ளே மறுக்கின்றனர் என்று தெரியவந் துள்ளது. இவர்கள் ஏழை மாணவர்கள் என்ற பெயரில், தங்கள் பள்ளி ஊழியர்கள் சிலரின் குழந்தைகளையே சேர்த்து கொள்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இந்த இடஒதுக்கீடு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

இடஒதுக்கீட்டை பின்பற்றாத பள்ளிகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை தொடர்ந்து அவர்களின் பதில் திருப்தி இல்லாவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.