Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கல்லூரிகளில் விரைவில் ஆசிரியர் நியமனம்

Print PDF

தினகரன்             16.12.2010

மாநகராட்சி கல்லூரிகளில் விரைவில் ஆசிரியர் நியமனம்
பெங்களூர், டிச.16:

பெங்களூர் மாநகராட்சி கல்லூரியில் காலியாக இருக்கும் 301 பணியிடங்கள் இன்னும் 3 மாதங்களில் நிரப்பப்படும் என்று மாநகராட்சி நிர்வாக சீர்த்திருத்த நிலைக்குழு தலைவர் லட்சுமிகாந்த ரெட்டி தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி ஆசிரியர் சங்கம் மற்றும் மாநில கல்வி துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

மாநகராட்சியில் இதற்கு முன் 100 வார்டுகள் இருந்த சமயத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வந்தது. தற்போது மாநகராட்சியின் பரப்பளவு 800 சதுர கிலோ மீட்டராக உயர்ந்துள்ளதுடன், 198 வார்டுகளாக அதிகரித்துள்ளது. புதிய வார்டுகளில் இயங்கி வரும் அரசு பள்ளி, கல்லூரிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தற்போதுள்ள அரசு பள்ளிகளுடன், மாநகராட்சி சார்பில் புதியதாக பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்படும். மாநகராட்சி கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் காலியாக இருக்கு 5 ஆயிரத்து 074 பணியிடங்கள் நிரப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது கல்லூரிகளில் காலியாக இருக்கும் 301 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை குறித்து மேயர் மற்றும் துணை மேயருடன் கலந்து பேசி 3 மாதங்களுக்குள் நிரப்புவோம்.