Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்வி தரத்தை மேம்படுத்த மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தினகரன்     17.12.2010

கல்வி தரத்தை மேம்படுத்த மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை, டிச. 17: தனியார் பள்ளிகளுக்கு நிகராக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதன் படி ஆரம்ப பள்ளிகளிலேயே 1 முதல் 5&வது வகுப்பு வரை யிலான மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் கல்வி அறிவை வளர்க்கும் புதிய திட்டம் அமல் செய்யப்படுகிறது.

இதற்காக துணை மேயர் மன்னன் முயற்சியால் தனி யார் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 100 ‘கிட்ஸ் மார்ட்‘ என்ற குழந்தைகள் பயிற்சி கம்யூட்டர் களை மாநகராட்சிக்கு இலவசமாக வழங்குகிறது. இதற்காக மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

ஆணையாளர் செபாஸ் டின் கூறும்போது “20 ஆரம்ப பள்ளிகளுக்கு தலா 5 கம்ப்யூட்டர் வீதம் வழங்கப்படும். ஒரு கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் 2 மாணவர் அமர்ந்து தானாக பயிற்சி பெற்றுக் கொள்ள முடியும். இதனை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். குழந்தை பருவத்தில் கம்யூட்டர் கல்வி கற்பிக்கப்படுவதால், மேல் வகுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். மாநகராட்சி பள்ளிகளில் சென்னையை அடுத்து மதுரையில் இந்த திட்டம் நிறைவேறுகிறது“ என்றார்.
 
நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சக்திவேல், நிறுவன முதன்மை அதிகாரி பிரின்ஸ்நெகமியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசம்பந்தன், மண்டல தலைவர் இசக்கிமுத்து பங்கேற்றனர்.