Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1,055 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

Print PDF

தினகரன்   07.08.2012

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 1,055 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக 4 பள்ளிகளில் படிக்கும் 1,055 பேருக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் இயங்கி வரும் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் விதமாக ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பில் 188 பேருக்கும், 11ம் வகுப்பில் 190 பேருக்கும், கருங்கல்பாளையம் காவேரிரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம்வகுப்பில் 193 பேருக்கும், 11ம்வகுப்பில் 153 பேருக்கும், இடையன்காட்டுவலசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பில் 104 பேருக்கும், காமராஜர் மேல்நிலைப்பள்ளி 9ம்வகுப்பில் 112 பேருக்கும், 11ம்வகுப்பில் 115 பேருக்கும் என 9ம் வகுப்பில் 597 பேருக்கும், 11ம் வகுப்பில் 458 பேருக்கும் என 1,055 மாணவ, மாணவியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான பயிற்சி வகுப்பு 2 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு 350 ரூபாய் மாநகராட்சி செலவிடுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பரிட்சார்த்த முறையில் முதல் கட்டமாக மாநகராட்சி கருங்கல்பாளையம் காவேரிரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம்வகுப்பு படிக்கும் 193 பேருக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட பயிற்சியில் மாணவிகளின் செயலாக்கத்தின் அடிப்படையில் மீதமுள்ள மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது..