Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி பள்ளிகள் 85.53 % தேர்ச்சி

Print PDF
தினமணி                10.05.2013

சென்னை மாநகராட்சி பள்ளிகள் 85.53 % தேர்ச்சி


தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 85.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் சார்பில் 6,510 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்களில் 5,568 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு 6,490 மாணவர்கள் தேர்வெழுதியதில் 5,504 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இது 84.81 சதவீதம் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி 0.78 சதவீதம் அதிகம்.

இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மாநகராட்சி சார்பில் தேர்வெழுதிய மாணவிகளில் 89.6 சதவீதம் (கடந்த ஆண்டு 89 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேவேளையில், 78.65 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர் (கடந்த ஆண்டு 76.6 சதவீதம்).

இரண்டு பள்ளிகள் 100 சதவீதம்: இந்தாண்டு இரண்டு மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்துள்ளன. அண்ணா நகர் மண்டலம் சுப்பராயன் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியும், நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியும் இந்த சாதனையை புரிந்துள்ளன.

இதில் நெசப்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டும் 100 சதவீதம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் முன்னிலை:

சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த வீரசெல்வி 1,145 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

நித்யா, பிரியா ஆகியோர் தலா 1,142 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், ஆயிஷா சித்திகா 1138 எடுத்து 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள 32 மேல்நிலைப்பள்ளிகளில் 25 பள்ளிகள் 80 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. 3 பள்ளிகள் 60 முதல் 80 சதவீத தேர்ச்சியும், 4 பள்ளிகள் 60 சதவீதத்துக்கு குறைவான தேர்ச்சியையும் பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 32 பள்ளிகளில் லாயிட்ஸ் சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 30.77 சதவீத தேர்ச்சி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.