Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒரு சதவீதம் அதிகரித்தது மாநகராட்சி தேர்ச்சி விகிதம்

Print PDF
தினமலர்            10.05.2013

ஒரு சதவீதம் அதிகரித்தது மாநகராட்சி தேர்ச்சி விகிதம்

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.மாநகராட்சியின் 14 பள்ளிகளில், 575 மாணவர்களில் 358 பேரும், 1,954 மாணவிகளில் 1,909 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், கடந்த ஆண்டு 92.16 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இம்முறை 93.11 ஆக அதிகரித்துள்ளது.

சேதுபதி பாண்டித்துரைப் பள்ளி மட்டும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. திரு.வி.க., பள்ளி 99.19, பொன்முடியார் பெண்கள் பள்ளி 98.58 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் டி.மீனலோசினி 1158 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். வெள்ளிவீதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆர்.ஜோதி 1147, எஸ்.ஜெயலட்சுமி 1122 மதிப்பெண் பெற்று அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். மாணவிகளுக்கு மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால் பரிசுகள் வழங்கினர். கல்வி அதிகாரி மதியழகுராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.