Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF
தினதந்தி       01.06.2013

கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்


‘கோவை மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி, தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளுக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

முதல் 3 இடங்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் கோவை மாநகராட்சி அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சுவாதி 500–க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து கோவை மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடத்தையும், ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.ருமேஷ் குமார் 500–க்கு 491 மதிப்பெண்களை பெற்று 2–வது இடத்தையும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ஹேமலதா, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேற்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பவதாரிணி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் வி.தினேஷ் ஆகியோர் 500–க்கு 487 மதிப்பெண்கள் பெற்று 3–ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேயர் பாராட்டு

அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமியை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு மேயர் சால்வை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–கோவை மாநகராட்சியில் உள்ள 27 மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு 8 பள்ளிகளுக்கு தரச்சான்று கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மேலும் 9 பள்ளிகளுக்கு தரச்சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் நன்கு பயற்சி அளித்து அதிக மார்க் எடுக்க வைத்த மாநகராட்சி ஆசிரியர்கள். கல்வி அதிகாரிகளை பாரட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., துணை ஆணையாளர் சிவராசு, துணைமேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கேஆர்.ஜெயராம், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், குழு தலைவர்கள் அம்மன் அர்ச்சுனன்,பிரபாகரன்,வக்கீல் ராஜேந்திரன், சாந்தாமணி, தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

கோவை மாநகராட்சி பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–எங்கள் பள்ளி ஆசியர்கள், தலைமை ஆசிரியர்கள் அளித்த பயிற்சியின் காரணமாக அதிக மதிப்பெண்கள் தேற முடிந்தது. மாநகராட்சி சார்பில் மாலையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.